ஐ எம் ஏ கார்பரேட் கிர்மினல் சர்கார் சம மாஸ்- ரசிகர்கள் பார்வை

  ஐஸ்வர்யா   | Last Modified : 06 Nov, 2018 08:38 am
sarkar-review

தளபதி விஜய் நடித்துள்ள சர்கார் படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியிருக்கிறது. இதனால் தளபதி  ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர். பேனர்கள், போஸ்டர்களால் தமிழகத்தில் சர்கார் ஜுரத்தை ரசிகர்கள் ஏற்படுத்தி உள்ளார்கள்.  இந்த தீபாவளியை சர்கார் தீபாவளியாக அவர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

இந்நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள சென்சார் போர்டில் உறுப்பினராகவும், திரை விமர்சகராகவும் இருக்கும் உமைர் சந்து என்பவர் சர்கார் படத்தை பார்த்துவிட்டு தனது விமர்சனத்தை ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார். சர்கார் படம் அதிரடியாக உள்ளது. வசனங்கள் பறக்கிறது. சமூகத்திற்கு நல்ல செய்தி உள்ளது என்று சினிமா விமர்சகர் உமைர் சந்து விமர்சனம் பதிவிட்டுள்ளார். 

முதல் பாகம் புல் ஆப் மாஸ் & terrific என்று துவக்கியுள்ளார். ''ஐ எம் ஏ கார்பரேட் கிர்மினல்'' என்ற விஜய்யின் வசனம் அதிர வைக்கிறது. இந்த வசனம் மொத்தப் படத்திற்கும் அழுத்தமான வசனமாக அமைந்து இருக்கிறது. இந்தப் படத்தின் மூலம் விஜய்க்கு மாஸ் ஹீரோ இமேஜ் கிடைத்துள்ளது. முக்கியமான சமூக செய்திகளை இந்தப் படத்தில் ரசிகர்களுக்கு விடுத்துள்ளார். அதிர வைக்கும் இசையுடன் வெளி வந்திருக்கும் இந்தப் படம் இயக்குனர் முருகதாசுக்கு மேலும் ஒரு ரத்தினம். 

படம் துவங்கியதில் இருந்து முடியும் வரை விஜய், விஜய், விஜய்...தான். பிரமிக்க வைக்கும் சண்டைக் காட்சிகள், நடனக் காட்சிகள், பறக்கும் வசனங்கள் என்று படம் அடுத்த லெவலுக்கு சென்றுள்ளது. நிச்சயமாக இந்தப் படம் பாக்ஸ் ஆபீசில் வெற்றி பெற்று, பைசா வசூலில் ஜொலிக்கும். இந்தப் படம் நன்றாக எடுக்கப்பட்டுள்ளதா என்றால் ஆமாம் என்று நூறு சதவீதம் சொல்ல வேண்டும். பவர் பேக்டு.
சண்டைக்காட்சிகள், பன்ச் வசனங்கள் மாஸ். நிச்சயமாக சர்கார் படத்தை பார்க்கலாம். மசாலா காட்சிகள் அதிகம் இருந்தாலும், விஜய் என்ற மாஸ் ஹீரோவை வைத்து படத்தில் நல்ல கருத்தை சொல்லி இருக்கிறார்கள் என்று உமைர் சந்து கூறியிருக்கிறார். 

கத்தி, துப்பாக்கியை அடுத்து முருகதாஸ், விஜய் இணைப்பில் இவர்களுக்கு ஹாட்ரிக் வெற்றி கிடைக்க உள்ளதாகவே பார்க்கலாம். 

Newstm.in 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close