தமிழ் ராக்கர்ஸ் மிரட்டலை முறியடிப்போம் - தயாரிப்பாளர் சங்கம்

  ஐஸ்வர்யா   | Last Modified : 06 Nov, 2018 08:42 am
producer-council-request

சர்கார் திரைப்படம் இணையதளத்தில் வெளியிடப்படும் என்ற தமிழ் ராக்கர்ஸ் மிரட்டலை முறியடிப்போம் என தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது. 

சர்கார் படத்தை இணையத்தில் வெளியிட உயர்நீதிமன்றம் தடைவிதித்திருந்தது. இந்நிலையில் சர்கார் படத்தின் எச்டி பிரிண்ட் விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும் என தமிழ் ராக்கர்ஸ் பெயரில் ட்வீட்டரில் தைரியமாக தெரிவித்திருந்தது. தமிழ் ராக்கர்ஸ்க்கு பயந்து தயாரிப்பாளர் சங்கமும் அனைத்து திரையரங்குகளிலும் கேமரா பொருத்த திட்டமிட்டிருந்தது.

இந்நிலையில்”சர்கார்" வெளியாகும் திரையரங்குகளில் எவரேனும் கேமிராவிலோ அல்லது மொபைல் போனிலோ படம் எடுக்கிறார்களா என கண்காணிக்க ஆட்களை நியமிக்க வேண்டும் என திரையரங்க உரிமையாளர்களுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close