சவாலில் வெற்றி கண்ட தமிழ் ராக்கர்ஸ்! இணையத்தில் சர்கார் படம்

  முத்துமாரி   | Last Modified : 06 Nov, 2018 04:03 pm
sarkar-movie-released-in-tamil-rockers

விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படத்தை தமிழ் ராக்கர்ஸ் இன்று  இணையத்தில் வெளியிட்டுள்ளது. இது சர்கார் படக்குழுவினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்துள்ள "சர்கார்" திரைப்படம் தீபாவளியையொட்டி இன்று நாடு முழுவதிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தின் கதை குறித்த விவகாரம் சர்ச்சையை கிளப்பிய நிலையில், ஒருவழியாக படம் வெளியாவதற்கு முன்பாகவே இந்த விவகாரம் முடிவுக்கு வந்தது. 

இதையடுத்து "சர்கார்" படத்தை இணையத்தில் வெளியிடுவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் கூறி வந்தது. அதுவும் மிகவும் தரமான ஹெச்.டி பிரிண்ட் இன்று மாலையே வெளியாகும் என்று கூறியிருந்த நிலையில் சற்றுமுன் சர்கார் படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இது படக்குழுவினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close