நயன்தாராவின் ரகசிய பார்ட்டி... தமிழக முதல்வராக அதிரடி ப்ளான்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 22 Nov, 2018 06:31 pm
nayantara-s-secret-party-the-chief-minister-of-tamil-nadu-plan

நயன்தாரா கொடுத்த ரகசிய பார்ட்டிக்கு ஆளாளுக்கு ஒரு காரணம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். சந்தடி சாக்கில் இன்னொரு காரணத்தையும் அவிழ்த்துவிடுகிறார்கள். அட்லீ விஜய் இணையும் புதிய படத்தில் கதாநாயகியாக கமிட் ஆகியிருக்கிறாராம்.

அதனால்தான் இந்த பார்ட்டி. ராஜா ராணி படத்தில் நயன்தாராவை வேறொரு லெவலில் ரசிக்க வைத்தவர் அட்லீ. அப்படியிருக்க. அவர் அழைத்தால் ‘நோ’ சொல்லவா போகிறார் நயன்? அதிருக்கட்டும். விக்னேஷ்சிவன் தன் காதலியான நயன்தாராவை மும்தாஜ் என்றோ, லைலா என்றோ, இந்திரலோகத்து ரம்பா என்றோ அழைக்க ஆயிரம் உரிமை இருக்கிறது.

ஆனால் ஒரு ட்விட்டில், வருங்கால சி.எம். என்று அழைத்திருக்கிறார். ஊரே கமுக்கமாக இருக்கிறது. ஒன்று ட்விட் கவனிக்கப்படாமல் இருக்கலாம். அல்லது அவரது பேராசையை நிராகரித்திருக்கலாம். ஆனாலும் அவ்வப்போது நயந்தாராவை அவர் சி.எம்.மேடம் எனத்தான் செல்லமாக அழைக்கிறாராம்.

ஜெயலலிதாவை போல திருமணம் செய்து கொள்ளாமல் சி.எம் ஆக வேண்டும் என்பது அவரது திட்டம். இதற்காக விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொள்ளாமல் அவருடன் வாழ்கை நடத்த முடிவெடுத்துள்ளார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். நடிகர்களுக்கு மட்டும்தான் முதல்வர் கனவு வருமா? நடிகைகளுக்கு வரக்கூடாதா? என நெத்தியடியாக திருப்பி அடிக்கிறார்கள் அவர்கள்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close