மோடி தொகுதியில் ரஜினி, கமல், விஜய் ரகசிய சந்திப்பு..?

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 24 Nov, 2018 03:04 pm
rajini-kamal-vijay-s-secret-meet

ரஜினி, கமல், விஜய் மூவரும் அரசியலுக்குள் காலடி எடுத்து வைக்க இருக்கும் நிலையில் ரகசியமாக சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

கருணாநிதி, ஜெயலலிதாவின் வெற்றிடத்தை நிரப்ப கமல் அரசியல் களத்தில் அடியெடுத்து வைத்துவிட்டார். ரஜினி மக்கள் மன்றத்தை ஆரம்பித்து ஆழம் பார்த்து வருகிறார். விஜய் தனது படங்கள் மூலம் அரசியலை ஆரம்பித்து இருக்கிறார். இந்த மூவர் வருகையை விரும்பாத அரசியல் கட்சியினர் அர்ச்சித்து வருகின்றனர். விஜயின் அரசியல் எண்ட்ரிக்கு கமலும், ரஜினியும் வரவேற்புத் தெரிவித்து விட்டனர். அவ்வப்போது ரஜினிக்கு அரசியல் எதிரி கமல் என சிண்டு முடியப்பட்டு வந்தது. அது உண்மைதானா என்கிற மாயத் தோற்றத்திற்கு வலுசேர்க்கும் வகையில் சில மாதங்களுக்கு முன்பு வரை சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் ரஜினியை சீண்டி வந்தார்.  கமல். ஆனால், இப்போது இருவரும் இணக்கமாக உள்ளதாக கூறப்படுகிறது. கமலை அதிமுக, சீண்ட, ரஜினியை திமுக முரசொலி தூண்ட பலம் ரஜினிக்கா, கமலுக்கா என விவாதங்களை அரங்கேற்றி வந்த தொலைக்காட்சிகள். 

இந்த விவாதங்களையெல்லாம் ஓரம் கட்டும் வகையில் சர்கார் படம் மூலம் தமிழக சர்க்காரை விமர்சித்த விஜய்க்கு எதிர்ப்புத் தெரிவித்து அ.தி.மு.க அமைச்சர்கள் நாடி நரம்பெல்லாம் புடைக்க ஓங்கிக் குரல் கொடுத்தனர். சினிமாக்காரர்கள் அரசியலுக்கு வருவதற்கு என்ன தகுதி இருக்கிறது என ஒட்டுமொத்த அரசியல்வாதிகளும் குரல் கொடுக்கும்போது, அரசியலுக்கு வரும் சினிமாக்காரர்கள் ஒன்று சேர மாட்டார்களா? அப்படித்தான் சர்காருக்கு ஆளும் கட்சியிட்மிருந்து வந்த எதிர்ப்பிற்கு விஜய்க்கு ஆதரவாக ரஜினியும், கமலும் குரல் கொடுத்தனர். இதென்ன கொடுமை... ஒருத்தனை தாக்கினால் ஊரே கூடுகிறதே... என சுதாரித்துக்கொண்ட அதிமுக அதன் பிறகே அமைதியானது.

இந்த நிலையில்தான் அந்த முக்கியத் திருப்பம் நிக்ழந்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன் வாரணாசி சென்றார் ரஜினி. அடுத்த நாளே கமலும் வெளியூர் செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால், அவர் சென்றது ரஜினி தங்கியிருந்த வாரணாசிக்குத்தான் என்கிறார்கள் இருவரையும் நன்கறிந்த நம்பத்தகுந்த வட்டாரத்தினர். வாரணாசியில் இருவரும் சந்தித்து அரசியல் பற்றி ஆலோசித்துக் கொண்டிருந்தபோது விஜய்க்கு போன் போட்டு அவருடைய அரசியல் நிலைப்பாடு குறித்து மூவரும் அரை மணி நேரத்திற்கும் மேலாக பேசிக் கொண்டதாகவும் கூறுகின்றனர். மூவரது இந்த ரகசியப் பேச்சில் மிகப்பெரிய திட்டம் இருப்பதாகவும் அடித்துச் சொல்கின்றனர். இதில் குறிப்பிடத்தக்க முக்கிய அம்சம் என்னவென்றால் வாரணாசி பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதி!

கியாரே செட்டிங்கா..? ஆழ்வார்பேட்ட ஆண்டவா வேட்டிய போட்டு தாண்டவா..? ஐம் கார்ப்பரேட் கிரிமினல்... இந்த செய்தியை முடிக்கும்போது ரஜினி, கமல், விஜயின் இந்த வசனங்கள் நம் மனதிற்குள் ஏன் வந்து போனதோ விளங்கவில்லை. எல்லாம் அந்த வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதருக்கே வெளிச்சம்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close