பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனஸ் தம்பதி மீது பீட்டா குற்றச்சாட்டு

  சௌந்தரியா   | Last Modified : 04 Dec, 2018 02:22 pm
peta-india-accuses-priyanka-chopra-nick-jonas-of-animal-cruelty

நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸ் ஆகியோர் தங்களது திருமண விழாவில் விலங்குகளை துன்புறுத்தி உள்ளதாக பீட்டா குற்றம் சாட்டி உள்ளது. 

டிசம்பர் 1ம்  தேதி பிரபல அமெரிக்க பாப் இசைப் பாடகர் நிக் ஜோனஸ்-ஐ நடிகை பிரியங்கா சோப்ரா திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் ஜோத்பூர் அரண்மனையில் கோலாகலமாக நடைபெற்றது.

 

— PETA India ❤️❤️ (@PetaIndia) December 3, 2018

 

இந்நிலையில், இவர்கள் திருமணத்தில் யானைகள், குதிரைகள் துன்புறுத்தப்பட்டதாக விலங்குகள் நல அமைப்பான பீட்டா தெரிவித்துள்ளது. கண்டனம் தெரிவித்து பீட்டா வெளியிட்டுள்ள வீடியோவில், "உங்கள் திருமணத்தில், யானைகள் சங்கிலியால் கட்டப்பட்டு  இருந்தன. குதிரைகள் துன்புறுத்தப்பட்டன. இதையெல்லாம் மக்கள் தவிர்த்து வருகின்றனர். உங்களுக்கு வாழ்த்துக்கள். இந்த நாள் உங்களுக்கு மட்டுமே மகிழ்ச்சியானது, விலங்குகளுக்கு மகிழ்ச்சியான நாளாக இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளது.    

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close