பிரியங்கா சோப்ரா திருமண வரவேற்பில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்

  Newstm Desk   | Last Modified : 05 Dec, 2018 04:54 am
modi-attends-priyanka-nick-jonas-reception

நூற்றுக்கணக்கான பாலிவுட், ஹாலிவுட் நட்சத்திரங்கள் அலங்கரித்த பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனாஸ் ஜோடியின் பிரம்மாண்ட திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு மணமக்கள் வாழ்த்தினார்.

தமிழ் திரையுலகில் தமிழன் படம் மூலம் அறிமுகமாகி, பின்னர் பாலிவுட் சென்று கலக்கிய நடிகை பிரியங்கா சோப்ரா, கடந்த சில ஆண்டுகளில் ஹாலிவுட் தொலைகாட்சி தொடரில் நடித்து உலக நாயகி ஆனார். பிரபல ஹாலிவுட் பாடகர் நிக் ஜோனாஸுக்கும் இவருக்கும் காதல் ஏற்பட்டது. திருமணம் செய்து கொள்ள இருவரும் முடிவெடுத்து, ராஜஸ்தானின் ஜோத்பூர் நகரில் பிரம்மாண்ட திருமண நிகழ்ச்க்கு ஏற்பாடு செய்திருந்தனர்

இந்த விழாவில் பல்வேறு பாலிவுட், ஹாலிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். சட்டமன்ற தேர்தலுக்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பிரதமர் நரேந்திர மோடியும், திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, புதுமண தம்பதியை வாழ்த்தினார். இரண்டு குடும்பத்தாரையும் பிரதமர் சந்தித்து சிறிது நேரம் பேசினார். அப்போது பிரபல 'கேம் ஆப் த்ரோன்ஸ்' ஹாலிவுட் தொலைக்காட்சி தொடரின் நடிகை சோபி டர்னர் மற்றும் நிக் ஜோனாஸின் சகோதரர் ஜோ ஜோனாஸ் ஜோடியை பிரதமருக்கு ப்ரியங்கா அறிமுகம் செய்து வைத்தார். அடுத்த திருமணம் இவர்களுக்கு தான், என பிரியங்கா சோப்ரா பிரதமரிடம் தெரிவித்தார்.

முன்னதாக பிரியங்காவுக்கும், ஜோனாஸுக்கும் கிறிஸ்தவ முறைப்படியும், பின்னர் இந்து முறைப்படியும் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close