அம்பானி வீட்டு திருமணத்தில் உணவு பரிமாறிய அமிதாப், அமீர் கான்

  Newstm Desk   | Last Modified : 15 Dec, 2018 03:16 pm
videos-of-amitabh-bachchan-and-amir-khan-serving-food-at-ambani-wedding-goes-viral

முகேஷ் அம்பானியின் மகள் திருமண விழாவில்  அமீர் கான், அமிதாப் பச்சான் ஆகியோர் உணவு பரிமாறிய  வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா – ஆனந்த் பிரமால் திருமணம், உலகமே வியக்கும் வகையில் மும்பையில் சமீபத்தில் நடைபெற்றது.

திருமண நிகழ்ச்சியில், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப், மத்திய அமைச்சர் ராஜ்நாத் மற்றும் சச்சின், அமிதாப், ரஜினி உள்ளிட்ட பிரபலங்கள் தங்களது குடும்பத்தினருடன் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். இந்து முறைப்படி வேத முழக்கத்துடன் சடங்கு சம்பிரதாயங்களுடன் திருமணம் நடைபெற்றது. 

— Certified Engineer (@Engihumor) December 14, 2018

 

கோலாகலமாக நடந்த இந்த திருமணத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார்களான அமீர் கான், அமிதாப் பச்சான் ஆகியோர் உணவு பரிமாறிய  வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. 

 

— Gargi Rawat (@GargiRawat) December 14, 2018

 

எவ்வளவு பெரிய பிரபலமாக இருந்தாலும் அம்பானி வீட்டு திருமணத்தில் இப்படி தான் நடந்து கொள்ள வேண்டும் என்று சிலரும், அம்பானி மீதுள்ள அன்பு மற்றும் மரியாதையால் அவர்கள் உணவு பரிமாறினார்கள் என்று சிலரும் கூறி வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close