பிரதமர் மோடியாக நடிக்கும் ”விவேக” வில்லன்

  Newstm Desk   | Last Modified : 05 Jan, 2019 02:34 pm

vivek-oberoi-to-play-narendra-modi-in-pm-s-biopic

மோடியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் விவேக் ஓபராய் மோடியாக நடிக்க உள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கையை மையமாக வைத்து பாலிவுட்டில் திரைப்படம் உருவாக உள்ளது. இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய், மோடியாக நடிக்க உள்ளார்.

இவர் விவேகம் படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட்-லுக் போஸ்டர் நாளை மறுநாள் அதாவது 7ம் தேதி வெளியாகிறது. இதனை ஓமங் குமார் இயக்க உள்ளார். இந்த மாதமே படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது. 

ஓமங் குமார் இதற்கு முன்னர் இரண்டு வாழ்க்கை வரலாற்று படங்களான ‘மேரி கோம்' மற்றும் ‘சர்ப்ஜித்' ஆகியவையை இயக்கியுள்ளார். குஜராத், டெல்லி, இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.