மாநாட்டில் மீண்டும் சேரும் சிம்பு-யுவன்!- ஜோடியாகும் ராஷி கன்னா

  Newstm Desk   | Last Modified : 08 Jan, 2019 02:08 pm
raashi-kanna-to-act-with-simbhu

மாநாடு படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாகவும், ராஷி கன்னா சிம்புவுக்கு ஜோடியாக நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

செக்க சிவந்த வானம் படத்திற்கு பிறகு சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள வந்தா ராஜாவா தான் வருவேன் படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இதனையடுத்து வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தின் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அரசியல் படமாக உருவாக உள்ள இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

இதனை மேலும் அதிகரிக்கும் வகையில் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்திற்கு பிறகு சிம்புவுடன் யுவன் இந்த படத்தின் மூலம் இணைகிறார். 

மேலும் இந்த படத்தில் ராஷி கன்னா சிம்புவுடன் இணைந்து நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close