உசுப்பேத்தி நடிக்க வைத்தார்கள்: "பேட்ட" குறித்து ரஜினி

  Newstm Desk   | Last Modified : 11 Jan, 2019 09:26 am
rajini-about-petta-response

"பேட்ட" படத்தின் மாஸ் காட்சிகளில் தன்னை உசுப்பேத்தி, உசுப்பேத்தி நடிக்க வைத்தார்கள் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடித்திருக்கும் பேட்ட படம் பொங்கல் விருந்தாக நேற்று வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் ரஜினியுடன் சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, சசிகுமார், நவாசுதின் சித்திக், மேகா ஆகாஷ் என பல நடிகர்கள் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். 

இந்நிலையில், அமெரிக்காவில் ஓய்வை முடித்து சென்னை திரும்பிய ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "பேட்ட படம் ரசிகர்களுக்கு பிடித்திருக்கிறது என்று கேள்விப்பட்டேன். மிகவும் சந்தோஷம். ரசிகர்களின் சந்தோஷமே எனது சந்தோஷம்.

பேட்ட சிறப்பாக வந்ததற்கு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்தான் காரணம். என்னை உசுப்பேத்தி, உசுப்பேத்தி நடிக்க வைத்தார்கள்’ என்றார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close