என்.ஜி.கே அப்டேட்: டப்பிங்கை முடித்தார் சூர்யா

  Newstm Desk   | Last Modified : 08 Feb, 2019 01:22 pm
suriya-sivakumar-completed-the-teaser-dubbing

'NGK' படத்தின் டீசர் இன்னும் 6 நாட்களில் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்திற்கான டப்பிங்கை நடிகர் சூர்யா முடித்துள்ளார். 

தானா சேர்ந்த கூட்டம்" படத்தைத் தொடர்ந்து நடிகர் சூர்யா தற்போது 'NGK' படத்தில் நடித்துள்ளார். இதனை செல்வராகவன் இயக்குகிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங் மற்றும் சாய் பல்லவி நடித்துள்ளனர். 

படத்திற்கு இசை செல்வராகவனின் ஆஸ்தான இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா. அதோடு தனுஷ் இந்தப் படத்தில் ஒரு பாடலையும் பாடியிருக்கிறார். தொடர்ந்து மற்ற நடிகர்களின் படங்களில் வெளியாகிவரும் நிலையில், இந்த படம் குறித்து எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்தது. இதனால் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் ஆகியோரிடம் ட்வீட்டரில் ரசிகர்கள் கேள்வி எழுப்பிக்கொண்டே இருந்தனர். 

 

 

 

இதனையடுத்து இப்படத்தின் டீசர் வெளியிட்டு நாள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நடிகர் சூர்யா இப்படத்திற்கான டப்பிங்கை முடித்துவிட்டதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close