அஜித்துடன் மோதும் மிஸ்டர் லோகல் சிவகார்த்திகேயன்

  Newstm Desk   | Last Modified : 14 Feb, 2019 04:03 pm
mr-local-release-date-announced

சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள மிஸ்டர் லோகல் திரைப்படம் மே 1ம் தேதி வெளியாக உள்ளது. 

சீமாராஜா திரைப்படத்திற்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, ராதிகா சரத்குமார், சதீஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைக்கிறார். ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படம் காமெடி என்டெர்டெயினராக உருவாகிறது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இந்நிலையில் நேற்று இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

இதே நாளில் அஜித்தின் பிங்க் ரீமேக்  திரைப்படமும் வெளியாக இருப்பதாக முன்பே அறிவிக்கப்பட்டது.  எனவே அஜித்துடன் சிவகார்த்திகேயன் மோத இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close