ஆதித்யா வர்மாவாக நடிக்கிறார் விக்ரம் மகன்

  Newstm Desk   | Last Modified : 20 Feb, 2019 11:15 am
aditya-varma-first-look

அர்ஜூன் ரெட்டி படத்தின் பாலா இயக்கிய தமிழ் ரீமேக் கைவிடப்பட்ட நிலையில் இந்த படத்தின் இரண்டாவது ரீமேக்கிற்கு ஆதித்யா வர்மா என தலைப்பு வைக்கப்பட்டு அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. .

தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக் செய்வது என தயாரிப்பு நிறுவனமான E4 Entertainment நிறுவனம் முடிவு செய்து இயக்குனர் பாலாவிடம் ஒப்படைத்தது. விக்ரமின் மகன் துருவை கதாநாயகனாக வைத்து பாலாவும் இப்படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டார். கடந்த 4 வாரங்களுக்கு முன்பு இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. வருகிற பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மார்ச் மாதம் வெளியாகும் என்று ஒரு தகவல் வெளியானது.

இந்நிலையில், திரைப்படத்தை கைவிடுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், வேறு இயக்குநர் மற்றும் வேறு நடிகர்களுடன் படப்பிடிப்பை மீண்டும் புதிதாக நடத்தவுள்ளதாக  தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. 

 

 

படத்தின் கதாநாயகியாக அக்டோபர் படத்தில் அறிமுகமாகிக் கவனம் பெற்ற பனிதா சந்து தேர்வாகியுள்ளார்.  படத்தின் இரண்டாவது கதாநாயகியாக பிரியா ஆனந்த் இணைந்துள்ளார். இந்தப் படத்தை அர்ஜூன்ரெட்டி பட இயக்குநர் சந்தீப் வங்காவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கிரி சய்யா இயக்கவுள்ளார். ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். அர்ஜூன் ரெட்டி படத்துக்கு இசையமைத்த ராதான் தமிழ் ரீமேக்குக்கும் இசையமைக்கிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இப்படத்திற்கு ஆதித்யா வர்மா என தலைப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close