பெரிய திரையிலும் ரவுண்டு வருவேன்: ஐஸ்வர்யா ராஜேஷின் வைரல் வீடியோ

  Newstm Desk   | Last Modified : 09 Mar, 2019 02:59 pm
aishwarya-rajesh-shares-10-year-old-video

சின்னத்திரை தொகுப்பாளினியாக இருந்த போது தான் பெரிய திரையிலும் வெற்றிகரமாக இருப்பேன் என்று நடிகை ஐஸ்வர்யா ராய் பேசிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகைகளுள் ஒருவராக திகழ்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். 2018 ஐஸ்வர்யாவின் சிறந்த ஆண்டாக அமைந்திருந்தது. சினிமாவில் நடிகையாக அறிமுகமாவதற்கு முன்னர் சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுத்து வழங்கி வந்தார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை அவர் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். 

 

— aishwarya rajessh (@aishu_dil) March 7, 2019

 

அந்த வீடியோவில் சின்னத்திரை தொகுப்பாளர் பாஸ்கி, நீ சின்னத்திரையில் ஒரு ரவுண்டு வருவ என்று ஐஸ்வர்யா ராஜேஷுடம் கூறுகிறார். அதற்கு சிரித்துக்கொண்டே, சின்னத்திரையில் மட்டும் அல்ல பெரியத்திரையிலும் தான் என ஐஸ்வர்யா பதில் அளிக்கிறார். இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து ஐஸ்வர்யாவின் கடின உழைப்பை பாராட்டி வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close