மீடியா முன்னாடி பேசுறது எனக்கே போரடிச்சிடுச்சி: விஜய் 

  Newstm Desk   | Last Modified : 13 Mar, 2019 09:41 am
thalapathy-opens-up-about-his-next-movie

சமீபத்தில் நடிகர் விஜய்யை சந்தித்துள்ள வெற்றி தியேட்டர் உரிமையாளர் ராகேஷிடம் விஜய் தனது அடுத்தப் படம் குறித்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். இதுகுறித்த ராகேஷின் ட்வீட் வைரலாகி வருகிறது. 

தெறி, மெர்சல் திரைப்படங்களுக்கு பிறகு தற்போது விஜய் மூன்றாவதாக அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

விளையாட்டை மையப்படுத்தி உருவாகி வரும் இந்த திரைப்படம் குறித்து எந்த தகவலும் வெளிவந்துவிட கூடாது என்று படக்குழுவினர் உறுதியாக உள்ளனர். 
இந்நிலையில் சமீபத்தில் சென்னையின் பிரபல திரையரங்கான வெற்றி தியேட்டரின் உரிமையாளர் ராகேஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில் விஜய்யை சந்தித்து பேசியது குறித்து பதிவிட்டுள்ளார். அதில் விஜய் தனக்கு கிரீன் டீ தயார் செய்து கொடுத்ததாக தெரிவித்துள்ள ராகேஷ், அவரிடம் அடுத்த படம் குறித்து பேசியதாகவும் கூறியுள்ளார். 

அதற்கு பதில் அளித்த விஜய், அடுத்த படம் கலர்புல்லாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும் கடந்த சில படங்கள் சீரியசாக இருந்துவிட்டதாகவும், படத்தில் மீடியா முன்பு பேசுவது தனக்கே போர் அடித்துவிட்டதாகவும் கூறியுள்ளார். 

இதுகுறித்த ட்வீட்டை ராகேஷ்  சில மணி நேரத்தில் டெலிட் செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close