பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'கபாலி' கமர்ஷியல் ஹிட். கபாலி கீசெயின், டீ ஷர்ட், கபாலி கண்ணாடி இப்படி கபாலியை மையப்படுத்தி பொருட்கள் விற்று தீர்ந்தது. ஏகப்பட்ட வீடியோக்களும் கபாலியை சுற்றி வந்துகொண்டே இருக்கிறது. வில்லன் பெயரில் இருந்த கபாலி, இந்த படத்தில் ஹீரோவாக மாறிவிட்டார். கபாலிடா என்று சொல்லும் சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் பெண் ஒருவர், பொண்டாட்டிடா என்று வெளியிட்ட வீடியோ வைரலானது. இதை கேள்விப்பட்ட ரஜினிகாந்த், அந்த பெண்ணை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.