சொகுசு காருக்குள் விஜயகாந்த் மகன் அட்ராசிட்டி!! கதறி அழும் கட்சிக்காரர்கள்!

  முத்து   | Last Modified : 07 Jan, 2020 01:15 pm
vijayakanths-son-went-fast-to-the-car

தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனின் திருமண நிச்சயதார்த்தம் எளிமையான முறையில் அண்மையில் நடந்து முடிந்திருக்கிறது. இவர் கோவை பெரியநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த பிரமுகர் இளங்கோ என்பவரின் மகளை கரம் பிடிக்க உள்ளார். இருவீட்டாரும் திருமண வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் விஜய பிரபாகரனுக்கு கல்லூரி காலத்திலிருந்தே ஒரு காதலி இருந்ததாகவும், அவருக்காகத் தான் வெளிநாட்டிற்குச் சென்று, தனது உடல் எடை குறைத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சூழலில் திருமணம் நெருங்கி வரும் நிலையில் உடல் எடையைக் குறைத்து விட்டு, தற்போது தினந்தோறும் மது அருந்தி விட்டு அட்ராசிட்டி செய்து வருவதாக கவலைப்படுகிறார்கள் தேமுதிகவினர். 

தான் புது மாப்பிள்ளை என்பதை மறந்து விட்டு, தனது ஆடம்பரமான லக்ஸஸ் எஸ்யூவி மாடல் 0009 என்கிற எண் கொண்ட மெட்டாலிக் கிரே ஸ்போர்ட்ஸ் யுட்டிலிட்டி காரில் படுவேகமாக கடற்கரை சாலைகளில் பறக்கிறார் என்றும் பதறுகிறார்கள்.

யாருக்கும் எந்த தொந்தரவும் தரக்கூடாது என்கிற நல்ல மனசு படைத்த நடிகர் விஜயகாந்த் மகனா இப்படி எல்லாம் செய்வது? வளர்ந்து அப்பாவுக்குத் துணையாக கட்சியைக் காப்பாற்றுவார் என நினைத்தால், தம்பி போற ரூட் சரியில்லையே? என்று அங்கலாய்கிறார்கள் கட்சி நிர்வாகிகள். யாராவது தம்பிக்கு புரியிற மாதிரி எடுத்துச் சொல்லுங்கப்பா!

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close