விஜய் சேதுபதி பிறந்தநாளுக்கு வைரலாகும் வீடியோ வாழ்த்து!

  சாரா   | Last Modified : 17 Jan, 2020 05:17 pm
vijay-sethupathy-birthday

விஜய்சேதுபதி பிறந்தநாளுக்காக சூப்பர் டீலக்ஸ் படத்தின் ராசுகுட்டி, மிமிக்ரி செய்து வாழ்த்து தெரிவித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

நேற்று மக்கள் செல்வன் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும்  நடிகர் விஜய்சேதுபதி பிறந்த நாளை வெகு சிறப்பாகக் கொண்டாடினார். விஜய் சேதுபதியின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு திரைத் துறையினர், நண்பர்கள், ரசிகர்கள் என அனைவரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். இந்நிலையில், `சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் விஜய் சேதுபதிக்கு மகனாக நடித்த ராசுகுட்டி அஷ்வந்த் குமாரின் வாழ்த்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

அஷ்வந்த் குமார், தனது ட்விட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் விஜய் சேதுபதிக்கு மீன்குழம்பு சோறு கொடுத்த அம்மாவுக்கு விஜய்சேதுபதி தேடிச் சென்று நன்றி தெரிவித்த பெருந்தன்மையை ராசுகுட்டி பாராட்டி பேசியிருப்பார். அதிலும் குட்டி குரலில் விஜய் சேதுபதி போல் மிமிக்ரி செய்திருப்பார். ராசுகுட்டியின் இந்த க்யூட் பதிவை இணையதளத்தில் அனைவரும் தற்போது பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close