நீயா நானா புகழ் கோபிநாத் தந்தை காலமானார்!

  சாரா   | Last Modified : 18 Jan, 2020 06:12 pm
neeya-naana-fame-gobinath-father-passes-away

சின்னத்திரை தொகுப்பாளர் கோபிநாத்தின் தந்தை உடல்நிலை சரியில்லாமல் நேற்று காலமானார்.

சின்னத்திரை தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலமானவர் கோபிநாத். இவர் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சியில் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு.இவருடைய சரளமான பேச்சும், தெளிவான தமிழ் உச்சரிப்பும், கனத்த குரல் தான் இவரது ப்ளஸ்.

தொலைக்காட்சியில் கிடைத்த பிரபலத்தின் மூலம் நடிகர் கோபிநாத் சினிமாவில் காலடி வைத்தார்.இவர் நிமிர்ந்து நில், திருநாள் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது பாரதி கணேஷ் இயக்கும்  “இது எல்லாத்துக்கும் மேல”  படத்தில் ஹீரோவாக  நடிக்கிறார். 

                                                                

கோபிநாத்தின் தந்தை கடந்த சில காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில், நேற்று காலமானார்.
இதையடுத்து கோபிநாத்தின் சொந்த ஊரான அறந்தாங்கியில் இன்று காலை இறுதி சடங்குகள் செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. கோபிநாத்  குடும்பத்தினருக்கு சின்னதிரையினர் பலர் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close