பிரபல நடிகையை காண 5 நாட்கள் ராவும் பகலும் தெருவில் தூங்கிய ரசிகர்..  ஆனால் அந்த நடிகை..?

  முத்து   | Last Modified : 20 Jan, 2020 11:45 am
pooja-hegdes-fan-slept-footpath-5-days

தெலுங்கு, இந்தியில் உச்ச நடிகையாக இருப்பவர் பூஜா ஹெக்டே. இவர் தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் உருவான 'முகமூடி' திரைப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக அறிமுகமானவர். தமிழில் ஒரு படத்துடன் ஓரங்கட்டிய இவர் இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் தீவிரமாக நடித்து வருகிறார். குறிப்பாகத் தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்துள்ள பூஜா, அங்கு கோடிகளில் சம்பளம் வாங்குவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் பாஸ்கர் ராவ் என்ற ரசிகர்கள் பூஜாவை சந்திக்க ஆந்திராவிலிருந்து மும்பைக்கு வந்துள்ளார். பூஜாவை பார்க்க முடியாததால் சோகத்தில் திரும்பி செல்லவில்லை. பூஜா வீடு இருக்கும் தெருவில் 5 நாட்களாக சாலையில் படுத்து தூங்கியுள்ளார். இதனை அறிந்த பூஜா ஹெக்டே அவரை அழைத்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'நீங்கள் கஷ்டப்படுவது எனக்கு வருத்தமளிக்கிறது. நீங்கள் தெருவில் தூங்குவதை நான் விரும்பவில்லை. நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் அன்பை நான் உணர்வேன். என்னுடைய பலமே நீங்கள் தான்' என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

பூஜா ஹெக்டே அடுத்ததாக பிரபாஸுடன் இணைந்து ஜான் படத்தில் நடிக்கிறார். தெலுங்கு மற்றும் இந்தியில் உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு இத்தாலி மற்றும் ஹைதராபாத்தில் நடக்கவுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close