கீர்த்தி சுரேஷுக்கு பதிலாக பிரியாமணி

  சாரா   | Last Modified : 20 Jan, 2020 05:11 pm
priyamani-replace-keerthy-suresh-in-ajay-devagn-movie

கீர்த்தி சுரேஷ் நடித்த 'மகாநதி' படம் அவருக்கு தேசிய விருதை தேடி தந்தது மட்டுன்றி அவரின் நடிப்பு இந்திய சினிமா முழுவதும் அவரை பிரபலமாக்கியது.இதன் மூலம் பாலிவுட்டில் நடிகர் அஜய் தேவ்கன் நடிக்கும்  "மைதான்" படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கீர்த்தி சுரேஷுக்கு கிடைத்தது.

இந்த படம் இந்திய கால்பந்து விளையாட்டு கதையை மையப்படுத்திய படமாகும். ஆனால் தற்போது கீர்த்தி சுரேஷ் உடல் எடையை குறைத்துள்ளதால் இந்த கதைக்கு மிகவும் இளமையாக தெரிவார் என்பதாலும் படக்குழு கீர்த்தி சுரேஷை அதிரடியாக நீக்கி  நடிகை ப்ரியாமணி நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இது பற்றி கூறிய ப்ரியாமணி இந்த பட வாய்ப்பு எனக்கு டிசம்பர் மாதம் வந்தது.இயக்குனர் அமித் கூறிய கதை எனக்கு மிகவும் பிடித்துப்போனது எனவே என்னால் இந்த வாய்ப்பை மறுக்க முடியவில்லை என கூறினார் 

கீர்த்தி சுரேஷ் தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த பிரம்மாண்ட படத்தில் நடித்து வருகிறார்.ப்ரியாமணி தெலுங்கு ரீமேக்கான அசுரன் படத்தில் வெங்கடேஷுக்கு ஜோடியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close