ரஜினிக்கு பதில் தனுஷ்! அம்மாவுக்கு பதிலா கீர்த்தி

  சாரா   | Last Modified : 23 Jan, 2020 05:33 pm
keerthy-to-act-his-mother-role-in-netrikan-remake

முன்னாள் கதாநாயகி மேனகா நடித்த கதாபாத்திரத்தில் அவரது மகளான கீரத்தி சுரேஷை நடிக்க வைக்க முயற்சி நடைபெற்று வருகிறது. 

ரஜினிகாந்தின் சில படங்களை தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர்களில் ஒருவரான தனுஷ், ரீமேக் செய்து நடித்துள்ளார். ஆனால், ரஜினி நடித்து 1981ம் ஆண்டு வெளியான ‘நெற்றிக்கண்’ படத்தை ரீமேக் செய்து நடிக்க வேண்டும் என்பது அவரது விருப்பம். 

                                                         

இந்நிலையில், ‘நெற்றிக்கண்’ படத்தை ரீமேக் செய்வதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது. ரஜினி நடித்த ‘நெற்றிக்கண்’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் கீர்த்தி சுரேஷின் அம்மா மேனகா என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்தப் படத்தில், கதாநாயகியாக கீர்த்தி சுரேஷை நடிக்க வைக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. தனுஷும் கீர்த்தி சுரேஷும் இதற்கு முன்பு ‘தொடரி’ படத்தில் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close