மாஸ்டர் மூன்றாவது லுக்..

  சாரா   | Last Modified : 26 Jan, 2020 07:50 pm
master-3rd-look

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் மாஸ்டர் படத்தின் மூன்றாவது போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.இந்த படம் கோடை விடுமுறைக்கு ரிலீஸ் செய்யப்படவுள்ளது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.இந்தப் படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய்சேதுபதி நடிக்கிறார்.

                                                

கைதி, மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்தை இயக்கி வருகிறார்.  படத்தின் 2 போஸ்டர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது.இந்நிலையில் 3-வது போஸ்டருக்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு இருந்தனர். குடியரசு தினத்தை முன்னிட்டு மாஸ்டர் படத்தின் 3-வது லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.மூன்றாவது லுக் போஸ்டர் வெளியானதை தொடர்ந்து விஜய் மற்றும் விஜய் சேதுபதியின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

                                                     

 

இதனையடுத்து, #MasterThirdLook என்ற ஹேஷ்டேக்கை விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close