'பிக்பாஸ் 2' போட்டியாளர்களின் பயோ - டேட்டா!

  பால பாரதி   | Last Modified : 23 Jun, 2018 12:25 am

bigg-boss-2-condustent-bio-data

மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ’பிக்பாஸ் 2’ நிகழ்ச்சி நேற்று தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்களை நிகழ்ச்சியின் தொகுப்பாளரான கமல்ஹாசன் ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தினார். அவர்கள் பற்றிய பயோ -டேட்டா இதோ..!

’இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ யாஷிகா ஆனந்த்: ’பிக்பாஸ்’ வீட்டிற்குள் முதல் போட்டியாளராக நுழைந்த யாஷிகா ஆனந்த், சமீபத்தில் வந்த ’துருவங்கள் பதினாறு’ மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி, பிறகு சர்ச்சையை ஏற்படுத்திய அடல்ட் காமெடிப் படமான ’இருட்டு அறையில் முரட்டு குத்து’வில் நாயகியாக நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவை ஒரு கலக்கு கலக்குவார் என எதிர்பார்த்த நிலையில்,’பிக்பாஸ்’ வீட்டிற்குள் போட்டியாளராக சென்றிருக்கிறார் யாஷிகா. ’பிக்பாஸ் 2’  போட்டியாளர்களில் மிகவும் இளம் வயதுக்காரர்’ என்கிற வர்ணணையோடு இவரை அறிமுகப்படுத்தினார் கமல்.

வில்லன் நடிகர் பொன்னம்பலம் : சினிமாவில் ஸ்டண்ட் மேனாக அறிமுகமாகி, பிறகு வில்லன் நடிகராக மாறிய பொன்னம்பலம், முன்னணி ஹீரோகளான ரஜினி, கமல், விஜயகாந்த் போன்றவர்களின் படங்களில் வில்லனாக வந்து வெளுத்து வாங்கினார். தற்போது சான்ஸ் இல்லாமல் இருக்கும் பொன்னம்பலம், ’பிக் பாஸ்’ வீட்டிற்கு வந்திருக்கிறார். ’தோல்வி எனக்கு பழக்கப்பட்டது தான், ஆகவே, இங்கே தோற்றாலும் பரவாயில்லை!’ என்கிற ஸ்டேட்மெண்ட் கொடுத்து, ’பிக் பாஸ்’ வீட்டிற்குள் நுழைந்தார் பொன்னம்பலம்.

மஹத் : அஜித்துடன்’மங்காத்தா’, விஜய்யுடன் ’ஜில்லா’, சிம்புவுடன் ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ போன்ற படங்களில் நடித்துள்ள மஹத், தமிழ் சினிமாவின் இளம் நாயகனாக வலம் வரும் இவர், சிம்புவுடன் தனக்கு இருக்கும் நட்பு, அவர் கொடுத்த உற்சாம் ஆகியவற்றை எடுத்து சொல்லிவிட்டு, ’பிக் பாஸ்’ வீட்டிற்குள் சென்றார். 

டேனியல் அன்னி போப்: தனுஷின் 'பொல்லாதவன்',  ’ரங்கூன்’, ’மரகத நாணயம்’ போன்ற படங்களில் நடித்திருக்கும் டேனியல் அன்னி போப், 'இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தில் வரும் 'ஃப்ரெண்டு... லவ் மேட்டரு... ஃபீல் ஆகிட்டாப்ல... ஆஃப் சாப்ட்டா கூல் ஆகிடுவாப்ல..' என்கிற ’டயலாக்’ மூலம் பிரபலமாகி, காமெடி நடிகராக வளர்ந்து வருகிறார். இந்நிலையில், ‘பிக் பாஸ்’ வீட்டை ஒரு கை பார்க்கும் முடிவோடு சென்றிருக்கிறார்.

ஆர்.ஜே.வைஷ்ணவி : ’சாவி’ இதழின் ஆசிரியரும், எழுத்தாளருமான சா.விஸ்வநாதனின் பேத்தியுமான வைஷ்ணவி, குறும்படங்கள், ரேடியோ ஜாக்கி, எழுத்து துறை என  பல துறைகளில் திறமை காட்டி வருகிறார். இவர் தற்போது, ’பிக் பாஸ்’ வீட்டிற்குள் வந்திருக்கிறார். 

ஜனனி ஐயர் : எஞ்ஜினியரிங் பட்டாதாரியான ஜனனி ஐயர், நடிப்பின் மீதுள்ள காதலால் சினிமாவுக்கு முயற்சி செய்து, 'திரு திரு துறு துறு' படத்தில் அறிமுகமாகி, ’தெகிடி’ படத்தில் கவனம் ஈர்த்து, பிறகு பாலா இயக்கத்தில் 'அவன் இவன்' படத்தில் மூலமாக புகழ் பெற்றார். இப்போது, பட வாய்ப்புகள் எதுவும் இல்லாத நிலையில் இவர், ‘பிக் பாஸ்’ வீட்டிற்கு வந்திருக்கிறார், 

அனந்த் வைத்தியநாதன் : விஜய் டிவியில் வரும் ’சூப்பர் சிங்கர்’ இசை நிகழ்ச்சியின் மூலமாக  பிரபலமான அனந்த் வைத்தியநாதன், பாலா இயக்கிய ’அவன் இவன்’ படத்தில் நடிகராகவும் அவதாரம் எடுத்திருந்தார். இந்நிலையில், எழுபது வயதை நெருங்கும் ஸ்டில் பேச்சுலரான அனந்த் வைத்தியநாதன்,’பிக் பாஸ்’ வீட்டிற்குள் கச்சேரி நடத்த சென்றுள்ளார்.

பாடகி ரம்யா : நகைச்சுவை மூலமாக சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த பெருமைக்குறிய கலைவாணர் என்.எஸ்,கிருஷ்ணனின் பேத்தியான ரம்யா, பிரபல பாடகி! தமிழில் இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், இமான், விஜய் ஆன்டனி போன்ற பிரபலங்களின் இசையில் பாடியுள்ள ரம்யா,தற்போது ’பிக்பாஸ்’ போட்டியாளராக சென்றிருக்கிறார்.  

சென்றாயன் : ‘பொல்லாதவன்’ படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான சென்றாயன், ’ஆடுகளம்’, ’மூடர் கூடம்’, ’ரெளத்திரம்’, என ஏராளமான படங்களில் காமெடியனாகவும், வில்லனாகவும் நடித்திருக்கிறார். இப்போது, பல படங்களில் நடித்துவரும் சென்றாயன், பார்வையாளர்களை பரவசப்படுத்துவதற்காக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றிருக்கிறார்.

ரித்விகா : பல குறும்படங்களில் நடித்த அனுபத்துடன் சினிமா வாய்ப்புத் தேடி அலைந்த ரித்விகா, பாலாவின் 'பரதேசி' படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் வந்து போனார்.பிறகு, பா.ரஞ்சித் இயக்கிய 'மெட்ராஸ்' படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்தார். ’பிக் பாஸ்’ மேடையில், பட வாய்ப்பிலாமல் இருப்பதை பட்டவர்த்தனமாக ரித்விகா சொல்லி, ’பிக்பாஸ்’ வீட்டிற்குள் செர்ன்றார் ரித்விகா.

மும்தாஜ் :மும்பையை சேர்ந்த மும்தாஜ்,  ’மோனிஷா என் மோனலிசா’ படத்தின் மூலம் டி.ராஜேந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டார், பின்னர், ’குஷி’ படத்தில் வரும் ’கட்டிப்புடி .. கட்டிப்புடிடா..’ பாடலில் வந்து கவர்ச்சியில் தெறிக்கவிட்டு, ரசிகர்களின் மனதில் அதிரடியாக நுழைந்தார். பிறகு, பல படங்களில் வந்து கவர்ச்சி தரிசனம் தந்த மும்தாஜ், திடீரென காணாமல் போனார். சில வருடங்களாக அட்ரஸ் இல்லாமல் இருந்த மும்தாஜை தேடிப் பிடித்து வந்து ’பிக்பாஸ்’ வீட்டிற்குள் அனுப்பி வைத்திருக்கிறார்கள். கிளாமர் ப்ளஸ் காண்டவர்சியை மட்டுமே பலமாக வைத்திருக்கும் ’பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் கிளாமர் ஏரியாவை கவர் செய்வதற்காக களம் இறங்கியிருக்கிறார் மும்தாஜ்.    

’தாடி’ பாலாஜி : சினிமாவில் நகைச்சுவை நடிகனாக வலம் வந்த ’தாடி’ பாலாஜி, சமீபகாலமாக ’கலக்கப் போவது யாரு?’ காமெடி நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார். கருத்து வேறுபாடு காரணமாக மனைவி நித்யாவை பிரிந்து வாழும் ’தாடி’ பாலாஜி, மனைவி, குழந்தையுடனும் சேர்ந்து வாழ்வதற்காகவே ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக தெரிவித்திருக்கிறார்.

தொகுப்பாளினி மமதி : ‘செல்லமே செல்லம்’, ’ஹலோ தமிழா’ போன்ற நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர்மமதி. கணவரை பிரிந்து வாழும் இவர், நீண்ட நாள்களாக சின்னத்திரையை விட்டு விலகி இருந்தார். சமீபத்தில்’வாணி ராணி’ சீரியலில் வந்து முகம் காட்டினார். தற்போது ’பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்கு போட்டியாளராக வந்திருக்கிறார். 

நித்யா : கணவர், ’தாடி’ பாலாஜியிடன் கருத்து மோதல் ஏற்பட்டு அவரைப் பிரிந்து வாழும் நித்யா, கமல்ஹாசனின் ’மக்கள் நீதி மய்யம்’ கட்சியில் உறுப்பினராகவும் இருக்கிறார். அத்துடன், சமூக சேவையிலும் ஆர்வம் காட்டுகிறார். 'மனைவியோடு மறுபடியும் சேருவேன்' என சூளுரைத்து ’பிக்பாஸ்’ வீட்டிற்குள் நுழைந்த ’தாடி’ பாலாஜியைத் தொடர்ந்து, நித்யாவும் ‘பிக் பாஸ்’ வீட்டிற்குள் சென்றுள்ளார். 

ஷாரிக் ஹாசன் : ’பிக் பாஸ்’ வீட்டிற்குள் 15வது போட்டியாளராக வந்திருக்கும் ஷாரிக் ஹாசன், நட்சத்திர தம்பதிகளான ரியாஸ் - உமா ரியாஸ்கானின் மகனாவார். இவர் ஒரு கால் பந்தாட்ட வீரர்.  

ஐஷ்வர்யா தத்தா : ஹீரோயினாகும் கனவோடு சினிமாவுக்குள் நுழைந்த ஐஷ்வர்யா தத்தாவுக்கு, நகுல் ஹீரோவாக நடித்த ’தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்' படத்தில் நாயகியின் தோழியாக நடிக்கும் கேரக்டர் தான் கிடைத்தது. அதை கெட்டியாக பிடித்துக் கொண்டு, 'பாயும் புலி' படத்தில் தங்கை கேரக்ட்டரில் நடிக்கும் அளவுக்கும் முன்னேறினார். இப்போது, ’பிக்பாஸ்’ வீட்டிற்குள் வந்திருக்கிறார்.

மீண்டும் ஓவியா :  ’பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலமாக பிரலமான ஓவியா மீண்டும் தனது அட்ராசிடியை ஆரம்பிக்கும் நோக்கத்துடன்  ’பிக்பாஸ்’ வீட்டிற்கு வந்திருக்கிறார். ஆனால், ’இந்த முறை நீங்க போட்டியாளராக அல்ல,  சிறப்பு விருந்தினர்! போட்டியாளரைப் போல் உள்ளே சென்று, மற்ற போட்டியாளர்களுக்கு அட்வைஸ் செய்ய வேண்டும் ..! என சொல்லி கமல் அனுப்பி வைக்க, கொஞ்சம் உற்காகம் குறைந்து உள்ளே சென்றார் ஓவியா!  ’பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் ஒட்டுமொத்தப் போட்டியாளர்களும் வீட்டிற்குள் சங்கமமாகி விட்டார்கள். இதில், நல்லவர் யார்? கெட்டவர் யார்? என்பது அவர் அவர் செயல்களின் மூலமாக வெளிப்படும்!   

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close