#BiggBoss Day 2 : இன்னொரு ஓவியா-ஆரவ்வை உருவாக்கும் பிக்பாஸ்

  Newstm Desk   | Last Modified : 23 Jun, 2018 12:31 am
what-happenend-in-bigg-boss-day-2

'குலேபா' பாடலோடு தொடங்கியது நேற்றைய நிகழ்ச்சி. யாஷிக்கா, ஐஸ்வர்யா, வைஷ்ணவி ஆகியோர் பாட்டு போட்ட உடனே டான்ஸ் அட ஸ்டார்ட் பண்ணிடனும் என்று முன்பே நினைத்திருந்தார்கள் போல. அவர்களின் நடனமும் நல்லா தான் இருந்தது.

மேக் அப் போட்டுக்கொண்டே கேமராவை பார்த்து என்ன சைட் அடிக்கிறீயா? என்று கேட்கிறார் யாஷிக்கா (அந்த கேமரா மட்டுமா?). அடுத்ததாக தன்னுடைய  பாய்ஃபிரண்ட் எப்படி இருக்கவேண்டும் என்று எடுத்துக்கூறினார். அப்படி ஒரு பையன் கிடைக்கவில்லை என்றால் சிங்கிளாகவே இருப்பாராம்.

பாத்திரத்தை சுத்தம் செய்ய அழகாக ரெடியாகி வந்த ஐஸ்வர்யாவை கலாய்த்துக்கொண்டு இருந்தார் பாலாஜி. அவர் பேசிய எதுவும் சிரிப்பு வரவழைக்கவில்லை என்றாலும், பாவம் வேற கன்டென்ட் இலலை அவரும் என்ன தான் செய்வார்.கொஞ்ச நேரத்தில் சென்றாயனுடன் குடும்ப பிரச்னை குறித்து பேச தொடங்கினார் பாலாஜி. நேம் சரியில்லை என்று கூறிவிட்டு சாய்ராம் என வாயில் அடித்துக்கொண்டார் (நீங்களுமா). பின்னர் நித்யா  ரொம்ப நல்ல டைப். ஆனா டைம் சரியில்லை  என்றார். அதற்கு, சண்டை எல்லார் வீட்டிலும் தான் நடக்கிறது என்று சென்றாயன் கூறிய உடன்.. பிரபலம்(!!) என்றாகி விட்டால் இப்படி தான் என்று கூறினார் பாலாஜி. ஆமாம் அவரும் பிரபலம் தானே.

தங்களுக்கு போர் அடித்தால் உடனே எதையாவது செய்யத்தொடங்கி விடுகின்றனர் யாஷிக்காவும், ஐஸ்வர்யாவும். அவர்கள் இருவரும் பேசிக்கொண்டே இருப்பதாக மற்றவர்கள் கூறுவதால் வாயில்  மாஸ்க் அணிந்துக்கொண்டு வந்தார்கள்(ஓவியா ரெஃப்ரென்சாம்). அதை வீட்டில் இருந்தவர்கள் பெரிதாக கண்டுக்கொள்ள வில்லை. வைஷ்ணவி மட்டும் கொஞ்சம் அதிகமாக ரியாக்ட் செய்தார். அவர் எல்லாத்துக்கும் ஓவர் ரியாக்ட் செய்து கொண்டு தான் இருக்கிறார்.

ஆம வடை, மண்ட கசாயம் என்று விதவிதமாக ஐஸ்வர்யாவை பெயர் வைத்து அழைக்கிறார் டேனி. அந்த பிள்ளைக்கு தமிழ் தெரியாமல் போனதை நினைத்து நிச்சயம் வருத்தப்பட்டு இருப்பார் பிக்பாஸ்.

நானும் வீட்டில் இருக்கிறேன் என்பதை காட்டிக்கொள்ள ரம்யா, “எப்படி ஒரே லூசுங்களா தேர்ந்தெடுத்து அனுப்பி இருக்காங்கா” என்று கூறினார். அவரையும் பிக்பாஸ் காரணத்தோடு தான் அழைத்தார் என்பதை ஏன் மறந்தார் அவர்?. அடிக்கடி போட்டியாளர்கள் சிலர் கேமரா முன் வந்து நடனமாடிக்கொண்டு இருக்கின்றனர். இதற்கெல்லாம் பிக்பாஸ் சட்டத்தில் ஏதாவது தண்டனை அளிக்கப்பட்டால் தேவலாம். கொஞ்சம் ஓவரா தான் போறங்க.

ஆனால் மும்தாஜிடம் சென்று கட்டிப்பிடி கட்டிப்பிடி டா.. பாட்டிற்கு நடனம் ஆட யாஷிக்காவும் ஐஸ்வர்யாவும் கேட்டதற்கு மும்தாஜ் பேரவை வரவேற்பு அளித்துள்ளனர். அதற்கான ஆதாரங்கள் #MumtazArmy  என்ற ஹேஷ்டேக்கில் கொட்டி கிடக்கிறது. ஆனால் அந்த பாட்டை அவர்கள் கெடுத்துவிடுவார்கள் என்று அஞ்சி பாதியிலேயே அதனை நிறுத்திக்கொண்டார் மும்தாஜ். பின், மமதி உடன் இணைந்து முட்டை மற்றும் இதர பொருட்களை எப்படி ஒவ்வொருவருக்கும் பிரிப்பது என்பது குறித்து பேசினார் மும்தாஜ். இப்போதைக்கு இது போன்ற விஷயங்களை நிர்வகிக்கும் பொறுப்புடன் இருப்பவர் மும்தாஜ் மட்டுமே. அதன்படி வீட்டின் தலைவியின் அனுமதியோடு அடுத்த வாரம் வரை இத்தனை முட்டை தான் உள்ளது. ஒவ்வொருவருக்கு ஒரு முட்டை தான் என்று அழகாக விளக்கினார். இந்த முறை முட்டைக்கொல்லாம் சண்டை வராது என்று தெரிகிறது.

ஆரவ் முதல் முறையாக, பிக்பாஸ் வீட்டில் ஓவியாவை தான் பிடித்திருக்கிறது என்று சொன்னது நினைவிருக்கிறதா? அதே ஸ்கிரிப்ட்.. அதே செட்.. ஆனால் ஆட்கள் மட்டும் வேற.

நேற்றைய நாளின் டாஸ்க்காக ஒவ்வொருவரிடமும் கேள்விகள்(வில்லங்கமாக) கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் சொல்லும் பதில் கன்வின்சிங்காக இருந்தால் வீட்டிற்கான லக்சரி பட்ஜேட் புள்ளிகள் கிடைக்கும். அவர்கள் பதில் தெளிவாக இல்லை என்றால் வீட்டின் தலைவர் ஜனனி, அவர்களிடம் பேசி வேறு பதிலை வாங்க வேண்டும்.

இந்த போட்டியில் பெரிய பிரச்னை உருவாகும் என்று நீங்களும் நினைத்தீர்கள் தானே, நாங்களும் அப்படி தான் நினைத்தோம். ஆனால் இம்முறை வந்திருப்பவர்கள் பிக்பாஸின் வலையில் சிக்க கொஞ்சம் நேரமாக கூடும் . அத்தனை தெளிவாக விளையாடுகிறார்கள்.

முதலாவதாக ஷாரிக்கிடம், இந்த வீட்டில் யாருடன் டேட்டிங் செய்ய விரும்புகிறீர்கள் என்று கேட்கப்பட்டது. உடனே அனைவரும் பதில் அறிந்தவர்கள் போல கலாய்க்க தொடங்கி விட்டனர். ஷாரிக் ரொம்பவும் யோசிக்காமல் ஐஸ்வர்யா என்றார். அதற்கு அவர் சொன்ன காரணம் தான் செம க்யூட் (கொஞ்சம் டெவலெப் பண்ணா ஷாரிக்கை பல பெண்களுக்கு பிடிக்க வாய்ப்பு இருக்கிறது). ஐஸ்வர்யா தான் ‘பொத பொத’னு இருக்கிறார். அங்கும் இங்கும் சுற்றுகிறார் என்று அவர் வயதுக்கேற்ற காரணத்தை சொன்னார். அதை ஏற்று சிரித்துக்கொண்டே நன்றி தெரிவித்தார் ஐஸ்வர்யார்.

மும்தாஜ் தன்னை அதிகம் எரிச்சலுட்டுவது யார் என்ற கேள்விக்கு ‘டேனியின் குரல்’ என்று கூறி முடித்துக்கொண்டார். பாலாஜியிடம் இந்தவீட்டில் யாரை மிகவும் பிடிக்கும் என்று கேட்டவுடன், தனது மனைவியை தான் கூறுவார் என்று நித்யா உட்பட அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் சென்றாயனை தான் பிடிக்கும் என்று அடுத்து நடக்கவிருந்த சென்டிமெண்ட் சீனை தவிர்த்தார்.

தன்னுடன் யார் அதிகமாக விவாதம் செய்வார் என்ற கேள்விக்கு ஜனனி என்று அவர் கூறிவிட்டு அதற்கான சரியான காரணத்தையும் கூறினார். பொன்னம்பலம் அதிகம் பேசும் தாய்கிழவியாக யாஷிக்காவை தேர்ந்தெடுத்தார்.

ஜனனியிடம் இந்த வீட்டில் தன்னை விட அழகான பெண் யார் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு தான்தான் மற்றவர்களை காட்டிலும் அழகு என்று அழகாக கூறினார். பின் பேச்சுக்காக அடுத்த இடத்தில் ஜஸ்வர்யாவை கைகாட்டினார்.

மமதியிடன் கேட்கப்பட்ட கேள்வி கொஞ்சம் குழப்பும் படி இருந்தது. அவருக்கும் கேள்வி புரியவில்லை. அதனை விளக்க வந்த ஜனனியையும் தடுத்துவிட்டார். அவருக்கே உரிய பாணியில் எதையோ கூறிவிட்டு சென்றார். வழக்கம் போல அது புரியவில்லை.  இந்த டாஸ்க்கில் ஜனனி சிறப்பாக செயல்பட்டதால் முழு லக்சரி புள்ளிகளையும் வழங்கினார் பிக்பாஸ்.

டாஸ்க் முடிந்ததும் ஐஸ்வர்யாவையும், ஷாரிக்கையும் அழைத்து ரெண்டு பேரும் பேசுங்க என்றார் தலைவி ஜனனி. உடனே அவர்கள் கூட்டாக ஒரு தலைவியாக நீங்க உங்க வேலையை சரியாக செய்கிறார்கள் என்று புகழ்ந்தனர் (தலைவி நல்ல தான் பண்றாங்க!). என்ன தான் பிக்பாஸ் முயற்சித்தாலும் இன்னோரு காதல் கதை இந்த வீட்டில் நடக்கும் என்று தோன்றவில்லை. பார்ப்போம்..

யாஷிக்காவும், ஐஸ்வர்யாவும் கூடி கூடி கேம் பிளான் போடுகிறார்கள். இப்போ குழந்தை போல தான் இருக்கனும், தேவையான நேரத்தில் நாம யாருனு காமிக்கனும் என்று பேசி கொண்டனர் இருவரும். பிக்பாஸ் அவர்களுக்கு ஹீரோயின் ரோல் கொடுத்தால்  இருவரும் வெவ்வேறு கதாபாத்திரத்தில் வாழ்ந்துக்கொண்டு இருக்கின்றனர்.

குறிப்பாக யாஷிக்கா, தன்னை எல்லோரும் டார்கெட்  பண்ண டிரை பண்றாங்க என்பதில் மிக உறுதியாக இருக்கிறார். ஆனால் அவரை தவிற வேறு யாரும் அவரைப் பற்றி பெரிதாக பேசுவது போல தெரியவில்லை.

இவர்கள் இருவருக்கு மொழி பெரிய பிரச்னையாக இருக்கிறது. பிக்பாஸ் வீட்டிற்கு வெளியேவும் மொழி தான் பிரச்னை. மேலும் தங்கள் முகம் கேமராவில் பதிவாக வேண்டும் என்பதில் இருவரும் தெளிவாக இருக்கிறார்கள். இன்று என்ன நடந்தது என்று நாளை பேசினால் அதில் அதிகமாக இவர்கள் பெயர் தான் இடம்பிடிக்கும்.

கடந்த சீசனில் இருந்த சக்தி, சினேகன், ஆரவ் போன்றவர்கள் இந்த வீட்டில் இல்லை. பெரிய மனுஷன் பொன்னம்பலமும், ஆனந்த் வைத்தியநாதனும் சிவனேனு இருக்கிறார்கள். மஹத் இன்னும் பேசவே தொடங்கவில்லை. டேனி, சென்றாயன் ஆகியோர் இதுவரை காமேடி என்று நினைத்து செய்த எதுவும் எடுப்படவில்லை. பாலாஜியின் நிலையை புரிந்து கொள்ள முடிகிறது. எனவே வீட்டின் சுவாரஸ்யத்தை அதிகப்படுத்த வேண்டிய முழுப்பொறுப்பும் பெண்களிடம் தான். அவர்கள் தான் எல்லா முடிவுகளையும் எடுக்கிறார்கள் இது ஆரோக்கியமான ஒன்றா என்பது போக போக தெரியும்.

நாள் முழுக்க என்ன நடந்தாலும் தூங்க செல்லும் நேரத்தில் சிரித்து பேசிக்கொண்டு இருக்கின்றனர். இந்த சீசனில் பிக்பாஸ் கொஞ்சம் ஓவர் டியூட்டி செய்ய வேண்டி இருக்கும்.. இல்லைனா.. அப்படியெல்லாம் பிக்பாஸ் விட்டுவிட மாட்டார் என்று நம்புவோம்.

பிக்பாஸ் 2 றிமுக நாள்  I முதல் நாள் 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close