#BiggBoss Day 6: ஒரு வார முடிவில் கமலின் முதல் அகம் டிவி விசிட்..

  Newstm Desk   | Last Modified : 24 Jun, 2018 08:18 am

what-happenend-in-bigg-boss-day-6

பிக்பாஸ் சீசன் 2 தொடங்கி ஒரு வாரம் முடிந்து விட்டது. சென்ற வாரம் கமல் போட்டியாளர்களை அறிமுகப்படுத்திய போது பார்வையாளர்களாக நாம் கணித்திருந்த அனைத்தும் தற்போது மாறியிருக்கும். ஆனால் முதல் சீசன் போல இது இல்லையே என்ற எண்ணத்தில் இது வரை மாற்றம் இல்லை. இனி வரும் நாட்களில் அதில் மாற்றம் ஏற்பட்டால் பிக்பாஸ்க்கு நல்லது. நமக்கும் கூட.

நேற்று சனிக்கிழமை, அதில் என்ன சிறப்பு என்கிறீர்களா... கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நாள். கமலை பிடித்தவர்கள் ரசிப்பதற்கும், பிடிக்காதவர்கள் விமர்சிப்பதற்கும் என சனி, ஞாயிறு கிழமைகளில் வழக்கத்தை விட பிக்பாஸ் பார்வையாளர்கள் அதிகமாகி விடுவார்கள். இந்த சீசனில் அகம் டிவி வழியாக கமல் போட்டியாளர்களுடன் நேற்று பேசுகிறார்  என்பதால் கொஞ்சம் எதிர்ப்பார்ப்பு அதிகமாகவே இருந்தது.

பிக்பாஸில் கமல் என்ட்ரிக்கென்றே உருவாக்கி வைத்திருந்த பிஜிஎம் ஒலிக்க  மேடைக்கு வந்தார் கமல். பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் ஏன் சின்ன சின்ன விஷயங்களுக்குகூட எரிச்சலடைகிறார்கள் என்ற காரணத்தை கூறினார். ஒரு மனிதனின் வாழ்க்கையில் வழக்கமாக தூங்கி எழும் நேரத்தில் மாற்றம் ஏற்பட்டால் மன அழுத்தம் அதிகமாகி விடும் என்பது தான் போட்டியாளர்களின் கோபத்திற்கு காரணம்என்றார். பிக்பாஸ் வீட்டில் வழக்கமாக விளைக்க அணைப்பது நள்ளிரவு 1 மணி போல ஆகிறது. அப்படியெனில் 11 மணிக்கு வழக்கமாக தூங்குபவர்களாக இருந்தால் பிக்பாஸ் வீட்டில் மன அழுத்தம் கன்ஃபார்ம்.

பின் ஓரு வாரம் நடந்தவற்றின் ரீகேப்பை பார்த்தார். ஓவியா, "உங்களை எல்லாம் பார்த்தா பாவமா இருக்கு" என்று கூறிவதோடு தொடங்கியது அந்த வீடியோ, அதில் ஏனோ அந்த வாரத்தின் ஹைலைட்டான வெங்காயப்பிரச்னை இடம் பெறவில்லை.

சுவாரஸ்யம் இல்லாத ரீகேப் முடிந்ததும், 6வது நாள் வீட்டில் நடப்பவற்றை அகம் டிவி வழியாக காட்டினார்கள். நேற்றைய நாள் 'கருத்தவன்லாம் கலீஜா' பாடலோடு தொடங்கியது. டேனி மட்டும் நடனமாட மற்றவர்கள் டல்லடித்தார். ஐஸ்வர்யா தன்னுடன் சேர்ந்து ஆட பார்டனர் இல்லாமல் நகர்ந்து சென்றார்.

கிட்சனில் அனந்த் வைத்தியநாதன், வைஷ்ணவி ஆகியோர் சமைத்துக்கொண்டு இருக்க, வேகமாக வந்த தலைவி ஜனனி வேற டீம் நபர்கள் சமையல் வேலையை பார்க்க கூடாது என்றார். பிக் கேப்டன் எந்த டீமுக்கு வேண்டுமானாலும் உதவலாம் என்றும் அவர் கூறியும் வைஷ்ணவிதொடர்ந்து சப்பாத்தியை திருப்புவதில் கவனமாக இருந்தார். பின் அனந்த் வைத்தியநாதன், ஒரு முறை மமதி கிட்சனில் சமைத்து சாப்பிட்ட போது நீங்கள் எதையும் கூறவில்லையே என்று ஜனனியிடம் கேட்டார். மமதி சமைத்ததை நான் பார்க்கவே இல்லை என்று ஜனனி கூற டென்ஷனான அனந்த் காட்டமாக பதில் அளித்து விட்டு சென்றார். அதிலேயே ஜனனி கொஞ்சம் வருத்தப்பட்டு இருப்பார்.

பின்னர், ஜனனி எப்போதும் எதையாவது கமென்ட் செய்துக்கொண்டே இருப்பதாக ஐஸ்வர்யா கூறினார். குறிப்பாக உடை விஷயத்தில் ஜனனி பேசுவது அவருக்கு பிடிக்கவில்லை என்றார். வீட்டில் இருக்கும் ஒரு ஆண் தன்னிடம் கூறியதால் தான் ஐஸ்வர்யாவின் உடைக்குறித்து கூறியதாக ஜனனி கூறினார். நான் எப்படி மற்றவர்களுக்கு தெரிய வேண்டும் என்பது எனக்கு தெரியும்  என ஐஸ்வர்யாவும் ஜனனி மீது கோபத்தை காட்டினார். இதை கேட்டதும், நான் என்ன பேசினாலும் அதை தவறாக புரிந்து கொள்கிறார்கள் என்று அழுதே விட்டார் ஜனனி. பின்னர் ஜஸ்வர்யா சென்று சாரி கூறி முத்தம் கொடுத்தார். இந்த சீசனில் முத்தக்காட்சிகள் எக்கச்சக்கமாக இருக்கும் என்று தோன்றுகிறது.

அனைவரும் கார்டனில் அமர்ந்து கொண்டு இருக்க அனைவரையும் இமிடேட் செய்து கொண்டு இருந்தார் டேனி.

ஐஸ்வர்யாவும், ஷாரிக்கும் தானியாக அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். ஐஸ்வர்யாவை மிகவும் பிடித்திருப்பதாக ஷாரிக் கூறினார். அதனை புரிந்துக்கொண்டு தன்னிலை விளக்கம் கொடுத்தார் ஐஸ்.

இவற்றையெல்லாம் பார்த்துவிட்டு பார்வையாளர்களிடம் நிகழ்ச்சி குறித்து கருத்துக்கேட்டார் கமல். அதில் ஒருவர் சென்றாயனை பார்க்கும் போது பரணி போல இருக்கிறது என்று கூற “ஒருவர் முகத்தில் மற்றவர்களின் முகத்தை ஒட்டாதீர்கள்” என்றார்.

பின் போட்டியாளர்களுடன் பேசத்தொடங்கினார் கமல். அனைவரும் அழகாக தயாராகி வந்திருந்தனர். பொன்னம்பலத்தில் தொடங்கி ஒவ்வொருவராக பேசினார். பொன்னம்பலம் அமைதியாக இருந்தாலும் வீட்டில் நடப்பவற்றை கவனிக்கிறார் என்பது அவர் பேசியதில் தெரிந்தது.

சென்றாயனிடம் ஆங்கிலத்தில் பேசி அவர் விதி மீறுவதை புரியவைத்தார் கமல். ஷாரிக், பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் தனது உறவினர்கள் போல இருக்கிறார்கள் என்றார் மேலும் மும்தாஜ் தனக்கு தாய் போல என்று கூறி கட்டுப்படுத்தி வைத்திருந்த கண்ணீரை சிந்தினார். அதை பார்த்து மும்தாஜ் அழ கமலே கொஞ்சம் சென்டியானார்.

ஜனனி தலைமை சிறப்பாக இருப்பதாக  கமல் கூறினார். பின் டாஸ்க்குகள் பற்றி பேசிவிட்டு வெங்காயப் பிரச்னை பற்றி பேசித் தொடங்கினார்.

இதில் ஒவ்வொருவரும் அவரவர் கருத்துக்களை கூறினர். பலர் கூறியது நித்யாவிற்கு எதிராக தான் இருந்தது. நித்யாவும் அதை ஏற்றுக்கொண்டார். ஆனால் பாலாஜி-நித்யா விவகாரத்தில் மற்றவர்கள் முடிவெடுக்க முயல்வது தெரிகிறது. கமலும் இதையே கூறி 'சாய்ஸ் இஸ் யுவர்ஸ்' என்றார். அதுதான் சரியானதும் கூட.

பாலாஜி மீது தவறே இல்லை என்பது மாதிரியான விவாதங்கள் அதிகம் நடந்தது. பொன்னம்பலம் மட்டும் நித்யா பக்கம் இருக்கும் நியாயத்தை கூறினார். நேற்றைய நிகழ்ச்சி முழுக்க நித்யாவை சுற்றி நடக்க அதோடு முடிந்தது. இன்று மீண்டும் கமல் போட்டியாளர்களிடம் பேசுவார்.

பிக்பாஸ் 2 றிமுக நாள்  I முதல் நாள்   I  2ம் நாள்   I   3ம் நாள்   I   4ம் நாள்

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close