மும்தாஜை ஏத்தி விடும் மமதி - பிக்பாஸின் புதிய ப்ரோமோ!

  திஷா   | Last Modified : 26 Jun, 2018 06:26 pm
bigg-boss-promo-3

பிக்பாஸின் அடுத்த ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. இன்று லக்ஸுரி பட்ஜெட்டிற்காக, ஏதோ விவகாரமான டாஸ்க் கொடுக்கப் பட்டுள்ளது போல் தெரிகிறது. அநேகமாக ஆண்களுக்கான அனைத்து வேலைகளையும் பெண்கள் செய்ய வேண்டும் என பிக்பாஸ் சொல்லியிருப்பார் போல. ஒரு ஷாட்டில் டேனியலுக்கு சாப்பாடு ஊட்டி விடுகிறார் மும்தாஜ். 

பிறகு ரெஸ்ட் ரூமில் வைத்து 'எந்த லக்ஸுரி பட்ஜெட்னாலும் சரி, எனக்கு கம்ஃபர்டபிள் இல்லைன்னா நா பண்ணவே மாட்டேன்' என மும்தாஜ் டேனியலிடம் சொல்கிறார். 

முறை தவறுதல் என்ற வார்த்தையை மமதி உபயோகிக்கிறார். சில விஷயங்களை நாங்க பண்ணவே மாட்டோம் என்கிறார். இந்த விஷயத்தில் மும்தாஜும் மமதியும் கூட்டணி போட்டிருக்கிறார்கள். 'இந்த மமதி சும்மா சும்மா அவங்கள ஏத்தி விடுறாங்க, வெளில போ சொல்லு அவங்கள' என கோபப் படுகிறார் மஹத். 

ஆக, இன்றைக்கு ஏதோ சம்பவம் இருப்பது போல் தெரிகிறது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close