மும்தாஜ் மீது கடும் கோபத்தில் போட்டியாளர்கள் - பிக்பாஸ் ப்ரோமோ

  திஷா   | Last Modified : 27 Jun, 2018 02:40 pm
bigg-boss-promo-1

ஒவ்வொரு நாளின் தொடக்கத்திலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோ நம்மை ஆக்கிரமித்துக் கொள்கிறது. ரசிகர்களின் ஆவலைப் புரிந்துக் கொண்ட சேனல் நிர்வாகமும், அதற்கேற்றார் போல் ட்விஸ்ட் வைத்து தினமும் பல ப்ரோமோக்களை வெளியிடுகிறது. 

அதன்படி தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் மும்தாஜ் மற்ற போட்டியாளர்களோடு சண்டை போடுகிறார். பெண்களுக்கு கொடுத்துள்ள வேலைக்காரி டாஸ்கை மமதியும், மும்தாஜும் வேண்டா வெறுப்போடு செய்து வருகிறார்கள்.  

இதனால் போட்டியாளர்கள் அனைவரும் அவர்கள் மீது கடும் கோபத்தை காட்டுகின்றனர். பிரச்னைக்கு மமதி முக்கியக் காரணமாக இருந்தாலும், அதை நேருக்கு நேர் மும்தாஜ் மட்டுமே ஃபேஸ் செய்கிறார். 

டாஸ்கை சரியாக செய்யாததால், நீச்சல் குளத்தை சுத்தப்படுத்த வேண்டுமென ஷாரிக் சொல்கிறார். நான் பண்ண மாட்டேன், முடியாது என மும்தாஜ் எதிர்வாதம் செய்கிறார். அதனால் ஒட்டு மொத்த பிக்பாஸ் வீடும் எரிச்சலில் இருப்பது போல் தெரிகிறது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close