சாப்பாடு ஊட்டி விடுவதில் சண்டை - பிக்பாஸ் ப்ரோமோ

  திஷா   | Last Modified : 27 Jun, 2018 04:53 pm
bigg-boss-promo-2-3

பிக்பாஸில் மீண்டும் அடுத்தடுத்து இரண்டு ப்ரோமோக்கள் வெளியாகியிருக்கின்றன. அதில் வெளியான முதல் ப்ரோமோவில், 'உதவியாளருக்கும் அடிமைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. ஷாரிக் அய்யா ஐஸ்வர்யா அம்மாவ சாப்பாடு ஊட்ட வைக்குறாங்க. இது வேலைக்காரங்க செய்ற வேலை கிடையாது' என கொந்தளிக்கிறார் வைஷ்ணவி. 

அதற்கு ஐஸ்வர்யாவோ, 'உங்களுக்கு கம்ஃபர்டபிள் இல்லைன்னா நீங்க பண்ணாதீங்க' என தனக்கு சப்போர்ட் செய்த வைஷ்ணவியை இன்னும் உஷ்ணமாக்குகிறார். 'உன் கிட்டயும் ஷாரிக் கிட்டயும் இருக்குற கம்ஃபோர்ட் சென்றாயன் கிட்ட இல்லைன்னு மும்தாஜ் சொல்றாங்க, ஆனா அவன் என் கிட்ட ஷாரிக்கும் மஹத்துக்கும் ஊட்டி விடுறாங்க அப்போ நா என்ன அவ்ளோ அடி முட்டாளாகிட்டேனாங்குறான்' என்கிறார் மஹத். 

இன்னொரு ப்ரோமோவில் மீண்டும் நித்யா - பாலாஜி சண்டைக் காட்சி இடம் பெற்றுள்ளது. ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு மீண்டும் இருவரும் களத்தில் குதித்திருக்கிறார்கள். நித்யா இனி ஒன்றாக சேர முடியாது என்று சொல்கிறார். அதற்கு பாலாஜி 'பீப்' போடும் அளவிற்கு சில தகாத வார்த்தைகளால் அவரை திட்டுகிறார். இதனால் நித்யா மனம் உடைந்து அழுகிறார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close