#BiggBoss Day 10: பிக்பாஸுக்கு முதல்ல தண்டனை கொடுங்க!

  Newstm Desk   | Last Modified : 29 Jun, 2018 10:01 am
what-happenend-in-bigg-boss-day-10

8ம் நாள் நள்ளிரவில் மும்தாஜும் மமதியும் பேசிக்கொண்டு இருந்தனர். யாஷிக்கா கிட்ட என்ன சொன்னீங்க என்று மும்தாஜ் கேட்டார். இப்படி தான் எஜமானர்களுக்கு ஊட்டி விடுவீங்களா என்று கேட்டதாக மமதி கூறினார். மேலும் அவர் விளையாட்டாக தான் கூறியதாகவும் தெரிவித்ததார். அதற்கு மும்தாஜ், “இதை தவறாக புரிந்துக்கொண்ட அந்த சின்ன புத்தி அங்க எல்லார்கிட்டயும் சொல்லிட்டு இருக்கு” என்றார். சின்ன புத்தி என்றது யாஷிக்காவை. அப்போது, தான் மமதிக்கு சப்போர்ட் பண்ணி பேசியதை அவரிடம் விளக்கினார் மும்தாஜ்.

10ம் நாள் காலையில் உதவியாளர்களான பெண்கள் தங்கி இருக்கும் அறைக்கு மட்டும் ‘பெல்’ அடித்தது. அவர்கள் எழுந்ததும் செய்ய வேண்டியவற்றுக்கான குறிப்பும் அவர்களுக்கு கொடுக்கப்பட்டது. அதில் எஜமானர்கள் எழுவதற்கு முன்பு அவர்களுக்கான காபி, டிஃபனை தயார் செய்து வைத்திருக்க வேண்டுமாம். பெண்களை அனைவரும் எழுந்து தயாராகினர். மற்ற எஜமானர்கள் அனைவரும் தூங்கி கொண்டு இருக்க... அனந்த் வழக்கம் போல் உதவியாட்களுக்கு முன்பே எழுந்து மூச்சு பயிற்சி செய்து கொண்டு இருந்தார்.

டாஸ்க்குக்கு ஏற்றார் போல ‘வா ராஜா வா... வா...’ என்ற பாடல் ஒலிக்க ஆண்கள் அனைவரும் விழித்தனர். உடை மாற்றி வேலை செய்து கொண்டு இருந்த உதவியாட்களான ஜனனி, நித்யா மட்டும் பாட்டுக்கு நடனமாடினர். ஜனனி நீண்ட நாட்களுக்கு பிறகு கேமரா முன் வந்து நடனமாடினார். தலைவி பொறுப்பில் இருந்து வெளியே வந்ததில் இருந்து உற்சாகமாக இருப்பதை பார்க்க முடிகிறது. டல்லடிக்கும் புடவையிலும் பளிச்சென இருக்கிறார் ஜனனி.

மாடர்ன் உதவியாளர்களாகவே மாறிப்போன யாஷிக்காவும், ஐஸ்வர்யாவும் பாட்டு, நடனத்தையெல்லாம் மறந்து மேக்அப்பில் சீரியசாக இருந்தனர். பாட்டு முடிந்ததும் தன் மகள் போஷிக்காவுக்கு குட் மார்னிங் என்றார் நித்யா. இந்த நிகழ்ச்சி இரவில் ஒளிப்பரப்பாவது அவருக்கு தெரியும் தானே?

காலையிலேயே மும்தாஜ் வேலை செய்யவில்லை என பேச தொடங்கிவிட்டனர் போட்டியாளர்கள். ரம்யாவிடம், ‘அவங்கள துணி துவைக்க ரெடியாக சொல்லு’ என்றார் டேனி.

மும்தாஜ் நியாயமாக இருப்பதாக ஜனனியும், ரித்விகாவும் பேசிக்கொண்டு இருந்தனர். மும்தாஜ் பற்றி பேச்சு எழும்போதெல்லாம் மமதியின் பெயரும் இணைந்து கொள்கிறது. மமதிய தான் புரிஞ்சிக்க முடியல, அவங்க ரியல் கேரக்டர் வெளியே வந்துடும் என்று பேசிக்கொண்டு இருந்தனர்.

ஆண்கள் அணியினர் துணி துவைப்பது பற்றி பேசிக்கொண்டு இருக்க அந்த வழியாக சென்ற மமதி “மும்தாஜ் அக்காவ பத்தி பேசுறீங்களா” என்றார். உடனே “நீங்க உங்க வேலைய பாருங்க” என பொன்னம்பலம் சொல்ல ஷாக்காகி நின்றார் மகதி. பொன்னம்பலத்திற்கே அது ஷாக் தான். தவறாக  பேசிவிட்டோம் என்பதை புரிந்துக் கொண்டு ஜெய் ஶ்ரீராம் என்று கூறி சமாளித்தார்.(எதுக்கு!)

புடவை கட்டிக்கொள்ள தனி அறை கொடுக்கவில்லை என புகார் கூறிக் கொண்டு இருந்தார் மும்தாஜ். அவர் கேட்கும் சில நியாயமான கோரிக்கைகளுக்கு கூட மற்ற பெண்கள் ஒத்துழைப்பு தருவதில்லை. உதவியாளர்கள் என்றால் சுயமரியாதையை விட்டுவிட்டு வேலை செய்ய வேண்டும் என்பது போல மற்றவர்கள் இருக்க மும்தாஜ் விடாப்பிடியாக இருந்தார். 'தன்னிடம் பிக்பாஸ் பேச வேண்டும்' என்றும், 'அது வரை மைக்கை போட மாட்டேன்' என்றும் கூறினார்.

இதற்குள்ளாக, மும்தாஜை பற்றி குறை கூறிய வைஷ்ணவியிடம்,  'கம்ஃபோர்ட் என்பது தனிப்பட்ட விஷயம். அதைப்பற்றி நாம் பேசக்கூடாது' என்று அந்த உரையாடலை நிறுத்தினார் ரம்யா. பின் தலைவி நித்யா கேட்டதற்காக புடவையை மட்டும் அணிந்து கொண்டு மைக் போடமாட்டேன் என்றார் மும்தாஜ்.

உதவியாட்கள் என்றாலும் பெண்களுக்கான தேவையை புரிந்து கொள்ள வேண்டும் என்று மும்தாஜ் கூறியதற்கு நியாயப்படி மற்ற பெண்கள் ஆதரவளித்திருக்க வேண்டும். ஆனால்…

மும்தாஜ்க்கு தான் கையாள் போல இருப்பதாக மற்றவர்கள் நினைப்பது மமதிக்கு புரிந்துவிட்டதோ என்னவோ மற்றவர்களிடம் அப்படிஎல்லாம் ஒன்றும் இல்லை என்று விளக்கிக்கொண்டே இருந்தார்.

சாப்பாடு பற்றிய பேச்சு இல்லாமல் பிக்பாஸ் 2ல் ஒரு எபிசோட் கூட வாய்ப்பில்லை அல்லவா... நேற்றும் இருந்தது. இன்னைக்கு இட்லி எப்படி கணக்கு படி தான் தருவீங்களா? இல்ல மனசு விரும்புன படி சாப்பிடலாமா என்று மமதியிடம் கேட்டார் பொன்னம்பலம். இருங்க கவுண்ட் பண்ணி சொல்றேன் என்று எண்ணினார் மமதி. அதற்குள் தனது உதவியாளரான ஜனனியிடமும் இதையே கேட்டார் பொன்னம்பலம். ஜனனி மமதியிடம் கேட்க, உங்க ஐயா ஏன் இவ்வளவு அவரசபட்றாரு.எப்படி தான் சமாளிக்கிறியோ, கோவில் தான் கட்டி கும்பிடனும் என்று கதாபாத்திரமாக மாறி பெர்ஃபார்ம் பண்ணார் மமதி. இது பொன்னம்பலம் காதில் விழ கோபப்பட்டு கத்திவிட்டு சென்றார் பொன்னம்பலம்.

இதுவே தப்புனா ஐஸ்வர்யாவை பார்த்து அவர் பேசியதற்கு என்ன செய்யலாம் என்பது வார இறுதியில் கமல் கூறினால் நலம்.

கொடுத்த டாஸ்க்கை மும்தாஜ் மற்றும் மமதி செய்யாமல் இருப்பதால் அவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று எஜமானர்கள் முடிவு செய்தனர். இதுபற்றி பேசும் போது, “மும்தாஜ் செய்யாத வேலையையும் சேர்த்து வைஷ்ணவி செய்கிறார். நம் முன் தலையை ஆட்டி விட்டு பின்னால் போய் என்ன பேசுகிறார் என்று தெரியாது” என்றார் டேனி. இப்போ தான் கண்டுப்பிடிச்சிருகாங்க.. குட்..

இந்த பேச்சு வார்த்தைக்கு நடுவில் நித்யாவ பலிகாடா ஆக்க மற்றவர்கள் முயற்சிக்கிறார்கள் என்பதையும் சேர்த்துக்கொண்டார் பாலாஜி. இவர் கேரக்டரை புரிந்து கொள்ளவே முடியலையே..

பின் தண்டனையை மும்தாஜ் மற்றும் மமதியிடம் விவரித்தனர் ஆண்கள் அணியினர். நான் வேலை செய்தேன் எனக்கு ஏன் தண்டனை என்றார் மும்தாஜ். காலையில் லேட்டாக வேலையை தொடங்கினீர்கள் என்று மகத் ஐயா?!! கூறினார். பின் ஷாரிக், “எவ்வளவு நேரம் லேட்டாக்கினீங்களோ அவ்வளவு நேரம் நீச்சல் குளத்தை சுத்தம் செய்ய வேண்டும்” என்று தண்டனையை விளக்கினார். மும்தாஜிடம் இருந்து ‘முடியாது’ என்ற பதில் மட்டுமே வந்தது. பின் தப்பு செஞ்சிங்கல அப்போ தண்டனை கொடுத்த செய்யனும் என்று ஆண்கள் கூறினர். தண்டயை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதில் உறுதியாக இருந்தார் மும்தாஜ்.

இவ்வளவு களேபரங்களுக்கும் நடுவில் ஷாரிக்கிற்கு ஊட்டி விட்டுக்கொண்டு இருந்தார் ஐஸ்வர்யா.. உங்க கடமைக்கு அளவில்லையா மா என்பது போல மற்ற பெண்கள் பார்த்துக்கொண்டு இருந்தனர்.பின்னர் மமதி நாள் முழுக்க அமைதியாக இருக்க வேண்டும் என்று தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை ஏற்றுக்கொண்டார்.

பின் தானாக ஆஜரான வைஷ்ணவி உதவியாளர்களுக்கும் அடிமைகளுக்கும் வித்யாசம் இருக்கிறது. ஷாரிக்கிற்கு ஐஸ்வர்யா ஊட்டி விடுகிறார். எந்த உதவியாளரும் அப்படி செய்யமாட்டார்கள் என்றார். எனக்கு அது ஓகேவா இருக்கு அதனால செய்றேன் என்று கூறினார் ஐஸ்வர்யா. அதற்கு ஆண்கள் அணியில் இருந்து பெரும் வரவேற்பு கிடைத்தது. பின் இல்ல என்கிட்ட மற்றவர்கள் வந்து சொல்றாங்க என்றதும் யார் சொன்னா என்று ஆண்கள் , பெண்கள் என அனைவரும் கோரசாக கேட்க அதை எதிர்பார்க்காத வைஷ்ணவி யோசிச்சி சொல்றேன் என்று மழுப்பினார்.

யாருக்கு சௌகரியமோ அவங்க செய்றாங்க மத்தவங்க செய்யல அவ்வளவு தான் என்று ஆண்கள் அணி சொன்னதை அனைவரும் ஏற்றனர்.

மீண்டும் மும்தாஜை தண்டனையை செய்ய சொல்லி கேட்டனர் எஜமானர்கள்.அதற்கு, “தப்பு செய்தது நான் இல்ல.. உங்க பிக்பாஸ் தான்.. அவருக்கு முதல்ல தண்டனை கொடுங்க “ என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார் மும்தாஜ். பிக்பாசை எதிர்த்து வந்திருக்கும் முதல் குரல் இவருடையது தான். ஆனால் மும்தாஜிடம் நேரடியாக மோத பிக்பாஸ் கொஞ்சம் தயங்குவது தெரிகிறது.பின் மும்தாஜ் செய்ய மறுத்த டாஸ்க்கை தாங்கள் செய்வதாக பிக்பாசிடம் கூறிவிட்டு சென்றனர் ஐஸ்வர்யாவும் , யாஷிக்காவும்.

இதைப்பற்றியெல்லாம் பேசாத வீட்டின் தலைவி நித்யா, உணவு செய்ய தேவையான பொருட்கள் குறைவாக இருப்பதால் இந்த வாரம் மட்டும் அனைவரும் கொஞ்சம் தான் சாப்பிட வேண்டும் என்று அறிவித்தார். உடனே வீட்ல சாப்பாடு இல்லைனு சொல்ற மாதிரி இருக்க கூடாது. எக்ஸ்டராவே செஞ்சி வைங்க என்றார் டேனி. அதிகமாக செய்து வைக்க அது என்ன மாமியார் வீடா.. பிக்பாஸ் வீடு மிஸ்டர் டேனி.

பின் நிலவரத்தை மும்தாஜ் விளக்கி கொண்டு இருந்த போதே அந்த இடத்தில் இருந்து சென்றால் டேனி.

பின் 10 நாளிலேயே எவ்வளவு பிரச்னை என்று டேனி பாலாஜியிடம் கூறிக்கொண்டு இருந்தார். சென்ற சீசனில் 10வது நாளிலெல்லாம் ஓவியாவின் ஷட் பண்ணுங்க ஹிட்டடித்து, அந்த தலைப்பில் குறும்படம் எல்லாம் வெளியாக தொடங்கி விட்டது என்பதை நினைவில் கொள்க.

பின் முன்னர் தான் தவறாக பேசியதற்கு யாஷிக்கா, ஐஸ்வர்யாவிடம் மன்னிப்பு கேட்டார் பொன்னம்பலம். மும்தாஜிடம் தனியாக ஐ லவ் யூ என சைகையில் கூறிக்கொண்டு இருந்தார் மமதி.

பின் புடவை மாற்ற தனியறையெல்லாம் இனி கொடுக்க முடியாது என்றும் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரும் மைக் அணிய வேண்டும் என்றும் பிக்பாஸ் விளக்கம் அளித்து அனுப்பிய குறிப்பை படித்தார் நித்யா. பின் மைக் போட்டுக்குறேன் ஆனா பிக்பாஸ் என்கிட்ட பேசனும் என்று கூறினார் மும்தாஜ். நடுவில் பாலாஜி-நித்யாகதையும் ஓடியது.

அடுத்த டாஸ்க்காக எஜமானர்களை குஷிப்படுத்த?!! வேலையாட்கள் கலை நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்ற அறிவிப்பு வந்தது. உதவியாளர்களின் பணிகள் என்னென்ன என்று பிக்பாஸ் நினைத்திருக்கிறார் என்று தெரியவில்லை.

அதற்காக பெண்கள் அனைவரும் எந்த மறுப்பும் கூறாமல் தயாராகினர். அவர்கள் உதவியாளர்கள் என்பதை அடிக்கடி மறந்து விடுகிறார்கள்

நடுவில் சென்றாயனை அதட்டும் விதத்தில் பேசிவிட்டார் மகத். பின் சென்றாயன் கோபப்பட சமாளித்தார். அவர் கூறி வார்த்தை சென்ற சீசனில் காயத்திரி ‘சேரி’ என்று கூறியதற்கு நிகரானது.

பின் ஜனனி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். முதலாவதாக ரம்யா தனது ‘சற்று முன்பு பார்த்த ‘ பாடலை பாடினார். அடுத்து ஐஸ்வர்யா ‘எதுக்காக கிட்ட வந்தாயோ’ என வார்த்தைகளை நீட்டி மடக்கி பாடினார். ஷாரிக் தான் ரசிக்கிறார் என்று பார்த்தால் அனந்த் கைத்தட்டி ரசித்துக்கொண்டு இருந்தார்.

பின் மும்தாஜும் நித்யாவும் சுப்பம்மா சுப்பம்மா பாட்டுக்கு நடனமாடினர். 90ஸ் கிட்ஸ்களை நிச்சயம் அந்த பாடல் பழைய நினைவுகளுக்கு கொண்டு சென்று இருக்கும். நித்யா ஆடியதை பார்த்து பாலாஜி கொடுத்த முகபாவனைகள் எல்லாம் ‘அட்டூழியங்கள் பிரோ’ வகை.

அடுத்தாக அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த் ஐஸ்வர்யா-யாஷிக்கா நடனம். மேடையே சூடுப்பிடிக்க ஆடினார்கள் இருவரும். கோடான கோடி பாடலின் சிக்னேச்சர் ஸ்டெப்பை அவர்கள் ஆடிய போது பிக்பாசும் ரசித்துக்கொண்டு தான் இருந்திருப்பார்.

மமதி 5 பாடல்களை இணைத்து அனந்தின் காதுகளுக்கு விருந்தளித்தார். விருந்துனு யார் சொன்னா? மமதியே சொன்னார். அடுத்தடுத்து ஆடிய அனைவருடனும் ஐஸ்வர்யாவும், யாஷிக்காவும் ஆடினர். குறிப்பாக ஐஸ்வர்யா வெளியே வரும் போது பல படங்களில் கமிட்டாக வாய்ப்பிருக்கிறது. பின் சிறப்பாக பெர்ஃபார்ம் பண்ண ஐஸ்வர்யாவுக்கும், நித்யா- மும்தாஜுக்கும் பரிசுகள் கொடுக்கப்பட்டது.

இறுதியில் எப்போதும் கேட்கும் அந்த குரல் கூட நேற்று கேட்கவில்லை. சட்டென முடிந்தது நிகழ்ச்சி. பின்ன இப்படி போனா என்ன பேசுறது?

பிக்பாஸ் 2 : றிமுக நாள்  I முதல் நாள்   I  2ம் நாள்   I   3ம் நாள்   I   4ம் நாள்   I   5ம் நாள்  I   6ம் நாள்  I   7ம் நாள்  I  8ம் நாள் I 9ம் நாள்  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close