டல்லடிக்கும் பிக்பாஸ்2 - தொகுப்பாளரை மாற்ற திட்டமா?

  திஷா   | Last Modified : 28 Jun, 2018 02:37 pm
ntr-to-enter-bigg-boss-2

தமிழைப் போல் தெலுங்கிலும் தற்போது பிக்பாஸ் - 2 ஒளிபரப்பாகிக் கொன்டிருக்கிறது. முந்தைய சீசனை ஜூனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்கினார். ஆனால் இப்போது அவர் படங்களில் பிஸியாக இருப்பதால் இந்த சீசனை நானி தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார். 

அமித் திவாரி, பானு ஶ்ரீ, தீப்தி சுனைனா, தனிஷ், கீர்த்தி, தேஜஸ்வி, சாம்ராட் ரெட்டி, கெளஷல், தீப்தி நல்லமொது, ஷ்யாமளா, கீதா மதுரி, ரோல் ரிடா, பாபு கொகினேனி, கணேஷ், சஞ்சனா, நுதன் நாயுடு ஆகிய 16 பேர் போட்டியாளர்களாக இருக்கிறார்கள். ஆனால் இதில் பெரியளவில் பிரபலங்கள் யாரும் இல்லாததால், ஷோ 'டல்'லட்டிக்கிறதாம். 

வித்தியாசமான டாஸ்க் என என்ன செய்தாலும் டி.ஆர்.பி ரேட்டிங் ஏற மறுக்கிறதாம். கடந்த சீசனின்  முதல் வாரத்தில் 9.24 ரேட்டிங் இருந்தது. ஆனால் தற்போது நானி தொகுத்து வழங்கும் இரண்டாவது சீசனின் முதல் வாரத்தில் 7.93 மட்டுமே கிடைத்துள்ளது. 

அதனால் நிகழ்ச்சியின் முன்னாள் தொகுப்பாளர் ஜூனியர் என்.டி.ஆரை அழைத்து வர தெலுங்கு பிக்பாஸ் டீம் முடிவெடுத்திருக்கிறதாம். அப்படி என்றால் நானி? என்கிறீர்களா? பதற வேண்டாம் சிறப்பு விருந்தினராக தான் ஜூனியர் என்.டி.ஆர் வர இருக்கிறார். 
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close