நித்யாவுக்கு தம்பியான பாலாஜி - பிக்பாஸ் ப்ரோமோ 2

  திஷா   | Last Modified : 28 Jun, 2018 02:19 pm
bigg-boss-promo-2

இன்றைய பிக்பாஸின் முதல் ப்ரோமோவைப் பார்த்த நமக்கு, எஜமானர் - உதவியாளர் டாஸ்க் முடிந்து, எஜமானி - உதவியாளர் டாஸ்க் கொடுத்திருப்பார்களோ  (எவ்வளவு பெரிய வித்தியாசம்...) என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் அது இப்போது உறுதியாகியிருக்கிறது. அதனை பிக்பாஸின் இரண்டாவது ப்ரோமோ உறுதிப் படுத்தியிருக்கிறது. 

பெண்கள் அறையில் அமர்ந்துக் கொண்டு பாலாஜி தம்பி என நித்யா அழைக்கிறார். 'வேல வேணும்ன்னு கேட்டாரு, சரி வாழ்க்கை குடுப்போமேன்னு குடுத்தேன். இத மடிச்சி வச்சிட்டு, போய் அக்காவுக்கு சூடா பால் கொண்டு வாங்க' என்றவர், 'தம்பி சூடே இல்ல தம்பி, இந்த மாசம் சம்பளம் கிடைக்காது, என்கிறார். 

இறுதியில், 'நான் எதுவுமே பண்ண கூடாதுன்னா, அப்போ நான் ஏன் இந்த வீட்ல இருக்கணும்' என கோபமாக நித்யா கேட்டவாறு ப்ரோமோ முடிகிறது. 

என்ன நடந்தது என்பதை தெரிந்துக் கொள்ள இரவு 9 மணி வரை காத்திருக்க வேண்டும். வேறு வழி...

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close