நித்யாவை டார்கெட் செய்யும் மற்ற பெண்கள் - பிக்பாஸ் ப்ரோமோ 3

  திஷா   | Last Modified : 28 Jun, 2018 04:52 pm
bigg-boss-promo-3

பிக்பாஸ் வீடு, பெண்களால் ரணகளமாக மாறியிருப்பது போல் தெரிகிறது. நித்யாவை எல்லோரும் டார்கெட் செய்வது போல் மூன்றாவது ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. 

'முதல் நாளில் இருந்தே பிரச்னைகளின் ஆணிவேர் நித்யா தான்' என்கிறார் ஐஸ்வர்யா. 'உங்களுக்கு பெர்சனல் பிரச்னை இருந்தா அதை பப்ளிக்கா ஆக்காதீங்க' என நித்யாவைப் பற்றி வைஷ்ணவி, ஜனனி மற்றும் ரம்யாவிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். 'வேணும்ன்னே எல்லாரும் சண்டை கிரியேட் பண்றாங்க' என யாஷிகா சொல்கிறார். 

'எல்லாரும் சேர்ந்து ஒரு ஆள டார்கெட் பண்றாங்க' என அழுதுக் கொண்டே மும்தாஜிடம் சொல்கிறார் நித்யா. 'நான் அதை விட மாட்டேன். உங்க மனச பொறுத்த வரைக்கும் நீங்க ரைட்டா இருக்கீங்கன்னா, அதை உலகமே ராங்குன்னு சொன்னாலும் கேக்க கூடாது' என நித்யாவை ஆறுதல் படுத்துகிறார் மும்தாஜ். 

ஆக, முதலில் சண்டைப் போட்டுக் கொண்டிருந்த மும்தாஜும் நித்யாவும் ஃப்ரெண்ட்ஸாகி இருக்கிறார்கள். ஆனால், இன்றைய பிரச்னைக்கு யார் காரணம் என்பது நிகழ்ச்சியில் தான் தெரிய வரும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close