#BiggBoss Promo: மகத்துடன் சண்டையிடும் நித்யா

  திஷா   | Last Modified : 29 Jun, 2018 12:32 pm

bigg-boss-promo-1

போன வருடம் போல், இந்த வருட பிக்பாஸ் சுவாரஸ்யமாக இல்லை என்பதாலோ என்னவோ, புது விதமான டாஸ்க்குகளை கொடுக்கிறார்கள். கூடவே போனஸாக பிரச்னைகளும் வந்து சேர்கிறது.

போட்டியாளர்களின் நிஜ குணங்கள் வெளிவர ஆரம்பித்துள்ள நிலையில், சண்டைகளும் வருகின்றன. பெண்கள் எஜமானிகளாகவும், ஆண்கள் வேலைக்காரர்களாகவும் இருக்கும் டாஸ்க் தான் தற்போது நடைமுறையில் இருக்கிறது. 

தற்போது வந்துள்ள ப்ரோமோவில் நித்யா சாப்பாட்டை வீணாக்கிவிட்டார் என்று மகத் சண்டை போடுகிறார். 'நா நாய் இல்ல, இந்த வீட்ல எல்லாத்துக்கும் சம உரிமை இருக்கு. நீங்க எத்தனை முறை வேஸ்ட் பண்ணிருக்கீங்க, நான் கேட்டன்னா? எல்லாத்துக்கும் லிமிட்ஸ் இருக்கு என பதிலுக்கு நித்யாவும் சீறுகிறார். 

இதையெல்லாம் கேட்டுக் கொண்டு பாலாஜி மிகவும் அமைதியாக இருப்பது போல் ப்ரோமோ உள்ளது.
 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close