மஹத்துக்காக அழும் யாஷிகா! - பிக்பாஸ் புதிய ப்ரோமோ

  திஷா   | Last Modified : 29 Jun, 2018 05:10 pm
bigg-boss-promo-2-3

நெருங்கிய நண்பர்களையும் பிக்பாஸ் வீடு எதிரியாக்கி விடும் போல. சின்ன விஷயங்கள் கூட பெரியளவில் பேசு பொருளாகி வரும் சூழலில் ஏற்கனவே கருத்து வேறுபாடுகளால் பிரிந்திருக்கும் பாலாஜி - நித்யாவுக்கு சொல்லவா வேண்டும்? 

அவ்வப்போது நடந்து வந்த சண்டை இன்று பெரிதாக வெடித்திருக்கிறது போல, குடிப்பழக்கத்தைப் பற்றி மிகுந்த கோபத்துடன் பேசுகிறார் நித்யா. பிறகு பேசும் பாலாஜி, 'நித்யா டாபிக் என்னன்னு புரிஞ்சிக்கிட்டு பேசுங்க' என்கிறார். 

இது தான் பிக்பாஸின் இன்றைய இரண்டாவது ப்ரோமோ. 

மூன்றாவதாக இன்னொரு ப்ரோமோவையும் வெளியிட்டு இருக்கிறது சம்பந்தப் பட்ட சேனல்.  முதல் சீசனில் எப்படி ஓவியா - ஆரவோ, அப்படி இந்த சீசனில் மஹத் - யாஷிகாவை காதலர்களாக்க முற்படுகிறார் பிக்பாஸ். மூன்றாவது ப்ரோமோமோவில் மஹத் தன்னுடைய பழைய காதலை சொல்லி ஒரு சோக காதல் பாடலும் பாடுகிறார்.

இதற்கு நடுவே யாஷிகா ஆனந்த் தேம்பி தேம்பி அழுகிறார் என்பது தெரியவில்லை. அவர் வேறு சமயத்தில் மற்றொரு விஷயத்திற்காக அழுததைக் கூட, இப்படி 'லிங்க்' செய்திருக்கலாம் பிக்பாஸ்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close