எவ்வளவு அடக்குமுறை இருந்தாலும்... மக்கள் குரல் கேட்டே தீரும்! பிக்பாஸில் கமல் 

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 30 Jun, 2018 11:10 pm
bigboss-season-2-kamal-haasan-exposes-his-politics

எவ்வளவு அதிகார பலத்தைக் காட்டினாலும் மக்கள் குரல் வெளிப்பட்டே தீரும் என்று பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கமல் அரசியல் பேசியிருப்பது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. 

இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் பேசிக்கொண்டிருக்கிறார். அப்போது, வீட்டில் மைக்கை கழற்றி வைத்து மும்தாஜ் ஆர்ப்பாட்டம் நடத்தினார். அதுகுறித்துப் பேச்சு வந்தது. அப்போது கமல் பேசுகையில், "சட்டம் தானாக உருவானது இல்லை. நாமாக வைப்பதுதான் சட்டம். அந்தச் சட்டத்துக்கு நாம் உட்பட வேண்டும். அதுதானே இந்த விளையாடு. 

இந்த நிகழ்ச்சியில் நான் நீதிபதி இல்லை. நான் ஒரு பிரதிநிதி... பார்வையாளரும் கூட. அதனால் பல நேரங்களில் மக்களுக்குத் தோன்றுவதே எனக்கும் தோன்றுகிறது. மொத்தமாகப் பெரும்பாலானவர்களுக்குத் தோன்றும் விஷயம்... அதுவே மக்கள் தீர்ப்பாக அமைகிறது. 
என்னதான் அதிகார பலத்தைக் காட்டினாலும், மக்கள் குரல் கேட்டே தீரும்..." என்று பிக்பாஸை வைத்து அரசியல் பேசினார். 

இதைத் தொடர்ந்து, மைக்கை கழற்றி வைத்துப் போராட்டம் நடத்திய மும்தாஜை மீண்டும் ஒரு முறை மைக்கை கழற்றிவைத்துத் தனியாகச் சென்று அமரும்படி கூறினார். 

மக்கள் குரல் கேட்டே தீரும் என்று தமிழகத்தில் நடக்கும் பல்வேறு பிரச்னைகளை மையமாக வைத்து கமல் பேசியிருப்பது பார்க்கும் பார்வையாளர்களுக்கும் அவரது ரசிகர்களுக்கும் எளிதாகப் புரிந்தது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close