வீட்டை விட்டு வெளியேறும் முதல் நபர் - பிக்பாஸ் ப்ரோமோ

  திஷா   | Last Modified : 01 Jul, 2018 11:11 am
bigg-boss-promo-1

வீடுகளை கட்டிப் போட்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி, வார இறுதிகளில் இன்னும் கவனம் பெறும். வெள்ளித்திரையை கரைத்துக் குடித்த கமல் ஹாஸன், சின்னத்திரையில் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதே அதற்குக் காரணம். முதல் சீஸனைத் தொடர்ந்து தற்போது ஒளிபரப்பாகும் இரண்டாவது சீஸனையும் கமல் தொகுத்து வழங்குகிறார். 

சனிக்கிழமைகளில் மற்றவர்களின் தவறுகள் சுட்டிக் காட்டப்படும். தேவைக்கு ஏற்ப குறும்படங்களும் வெளியிடப் படும். இந்நிலையில் ஞாயிற்றுக் கிழமையான இன்று 'எலிமினேஷன்' நடைப்பெறும். போன வாரம் முதல் வாரம் என்பதால் எலிமினேஷன் இல்லை, என்பதை முன்கூட்டியே நமக்குத் தெரிவித்திருந்தார் கமல். 

ஆனால் இந்த வாரம் கட்டாயம் இருக்கிறது. மும்தாஜ், மமதி, பொன்னம்பலம், ஆனந்த் வைத்தியநாதன் ஆகிய 4 பேரும் இந்த எலிமினேஷன் லிஸ்டில் இருந்தார்கள். இதில், பொன்னம்பலம் நேற்று சேஃப் ஆகிவிட்டார். மீதம் மூன்று பேர் மட்டுமே அந்த லிஸ்டில் உள்ளனர். இந்த சீஸனில் எலிமினேட் ஆகும் முதல் நபரை யார் என தெரிந்துக் கொள்ள ரசிகர்களும் அதீத எதிர்பார்ப்பில் உள்ளனர். 

இந்நிலையில் தற்போது இன்றைய முதல் ப்ரோமோவை வெளியிட்டு இருக்கிறது சம்பந்தப் பட்ட சேனல். அதில் 'இந்த 16 பேரில் வீட்டிலிருந்து வெளியேறும் முதல் நபர் யாராக இருக்கக் கூடும்' என கமல் கேட்கிறார். மறுபுறம் அகம் டி.வி-க்குள் ஆனந்த் வைத்திய நாதன், மமதி, மும்தாஜ் ஆகியோர் எழுந்து நிற்பது காட்டப் படுகிறது. எப்படியும் ஆனந்த்தான் வெளியேறுவார் என்று தெரிகிறது. இதில் ஏதாவது ட்விஸ்ட் வைக்கிறார்களா என்று பார்ப்போம்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close