ஸ்ருதி ஹாஸனை வெட்கப் பட வைத்த டேனி, கமல் ரியாக்‌ஷன்? - பிக்பாஸ் ப்ரோமோ

  திஷா   | Last Modified : 01 Jul, 2018 01:26 pm
bigg-boss-promo-2

தற்போது வெளி வந்திருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோ படு ரகளையாக உள்ளது. விஸ்வரூபம்-2 படத்தின் சிங்கிள் ட்ராக் பாடல் அடுத்த வாரம் பிக்பாஸ் மேடையில் வெளியிடப் படும் என கடந்த வாரமே கமல் அறிவித்திருந்தார்.

அதன்படி, பாடலை வெளியிடுவதற்காக ஸ்ருதி ஹாஸன் நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார். இதனால் ஹவுஸ் மேட்ஸ் பயங்கர குஷியில் இருக்கின்றனர். ஸ்ருதி பாடியதைக் கேட்டு, ஃபென்டாஸ்டிக், பியூட்டிஃபுல் என ஆங்கிலத்தில் பாராட்டுகிறார் சென்ட்ராயன். அதைக் கேட்டு அரங்கம் அதிர்கிறது. 'அவருக்கு இங்க்லீஷ் ரொம்ப பிடிக்கும், இப்போ கத்துக்கிட்டு இருக்காரு' என கமல் கூற, 'இன்னும் உங்களிடமிருந்து அதிக ஆங்கில உரையாடல்களை எதிர்ப்பார்க்கிறேன்' என ஸ்ருதி கூறுகிறார்.  

இதில் டேனியல் ஒரு படி மேலே சென்று ‘நம்ம அடுத்த வாரம் கூட பேசிக்கலாம் சார், ஸ்ருதி ஹாஸன் கிட்ட ஒரு வார்த்தை பேசிக்கிறேன்’ என்று கூற, அரங்கமே அதிர்ந்தது. ஸ்ருதியும் வெட்கத்தில் சிரிக்கிறார்.

பிறகு என்ஜாய் என்ஜாய் என கமலும் சிரித்துக் கொண்டே சொல்கிறார். ஆக, இன்று ஹவுஸ்மெட்ஸுக்கும் பார்வையாளர்களுக்கும் என்டெர்டெயின்மென்ட் கியரண்டி. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close