அப்பா மகள் பாடி அசத்திய அரங்கம் - பிக்பாஸ் ப்ரோமோ - 3

  திஷா   | Last Modified : 01 Jul, 2018 03:27 pm
bigg-boss-promo-3

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது ப்ரோமோவும் வெளியாகியிருக்கிறது. அதில் கமலும், ஸ்ருதி ஹாஸனும் விஸ்வரூபம் - 2 பட பாடலைப் பாடுகிறார்கள். குறிப்பாக இந்தப் பாடலைப் பாடும் ஸ்ருதியின் குரல் தேனில் ஊற வைத்த ஜாமுனைப் போல் தித்திப்பாக இருக்கிறது. அவர்கள் இருவரும் பாடுவதைக் கேட்டு அரங்கம் கைத்தட்டல்களால் நிரம்பி வழிகிறது. அப்பாவும் - மகளும் கட்டித் தழுவி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். 

'நீங்க ரெடியா? விஸ்வரூபம் - 2 படத்தின் சில பாடல்களை உங்களுக்கு அறிமுகப் படுத்த இருக்கிறோம். நாங்க எவ்ளோ பெரிய விழா வச்சாலும், இத்தனைப் பேரை திரட்ட முடியாது' என்கிறார் கமல். முழுக்க முழுக்க விஸ்வரூபம் - 2 பாடல் வெளியீட்டை மட்டும் மையப் படுத்தி இந்த ப்ரோமோ உருவாகியுள்ளது.  

இந்த மகிழ்ச்சியோடு சேர்த்து, எலிமினேட் ஆகப் போகிறவர் யார் என்பது தான் தற்போது பிக்பாஸ் ரசிகர்களின் ஒரே எதிர்ப்பார்ப்பு. அதற்கு இன்று இரவு 9 மணி வரை காத்திருக்க வேண்டும். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close