இந்த வார தலைவர் சென்ட்ராயன்? - பிக்பாஸ் ப்ரோமோ 1

  திஷா   | Last Modified : 02 Jul, 2018 01:15 pm
bigg-boss-promo-1

ஒரு வழியாக பிக்பாஸ் இந்த சீஸனின் எலிமினேஷன் நடந்து விட்டது. முதல் ஆளாக மமதி சாரி வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார். இனி இன்றிலிருந்து வீட்டிற்கு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப் பட்டு, எலிமினேஷனுக்கான நாமினேஷனும் நடத்தப்படும்.

அந்த வகையில் தற்போது பிக்பாஸ் ப்ரோமோ ஒன்று வெளிவந்துள்ளது. அதில் கன்ஃபெஷன் (Confession) அறைக்கு முதலில் யார் வருகிறார்களோ அவர் தலைவர் பதவிக்கு போட்டியிட தகுதியானவர்கள் என்று பிக்பாஸ் அறிவிக்கிறார். அடித்து பிடித்து சென்றதில் சென்ட்ராயன் மற்றும் வைஷ்ணவி முதலில் செல்கிறார்கள் என்று தெரிகிறது.

'உங்கள் இருவரில் யார் அதிகப் படியான 'ஹக்ஸை' பெறுகிறார்களோ, அவர்கள் தான் இந்த வாரத்தின் தலைவர்' என இருவருக்கும் ஒரு ட்விஸ்ட் வைக்கிறார். 

வைஷ்ணவி மேல் அதிருப்தி நிலவும் நேரத்தில் அவர் இதில் வெற்றி பெறுவாரா இல்லை அனைவரிடமும் வெள்ளந்தியாக இருக்கும் சென்ட்ராயன் தலைவராவாரா என்பதை தெரிந்துக் கொள்ள இரவு 9 மணி வரை காத்திருக்க வேண்டும். ஆனால் முகம் முழுக்க மகிழ்ச்சியுடன் 'மண்ட இப்போ தான் வேலை செய்யுது, என்ன செய்ய போறேன்' என சென்ட்ராயன் சொல்வதை வைத்துப் பார்த்தால் அவர் தான் இந்த வாரத்தின் தலைவர் என தெரிகிறது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close