'பிக்பாஸ்' பிரச்னையை தீர்த்து வைத்த குஷ்பு!

  Bala   | Last Modified : 03 Jul, 2018 01:27 pm
kushboo-who-solved-bigg-boss-problem

’பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களைப் பயன்படுத்துவதாக சொல்லப்படும் ’பெப்சி’ தொழிலாளர்களின் புகாரை, நடிகை குஷ்பு தலையிட்டு தீர்த்து வைத்துள்ளார்.

பொது மக்களின் இரவு நேரக் கேலிக்கையாகவே மாறியிருக்கும் `பிக்பாஸ் 2’  நிகழ்ச்சி கடந்த ஜுன் மாதம் 17-ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது . கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியை படம் பிடிப்பதற்காக, சென்னை பூந்தமல்லி சாலையில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக தினமும் 400-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப கலைஞர்களும், தொழிலாளர்களும் பணியாற்றி வருகின்றனர். இதில் 10 சதவீதத்தினர் மட்டுமே ’பெப்சி’ தொழிலாளர்கள் பயன்படுத்தப் படுகின்றனர். இதனால், ’வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களை தவிர்த்து விட்டு, ’பெப்சி’ தொழிலாளர்களையே பயன்படுத்த வேண்டும்’ என தொலைக் காட்சி நிர்வாகத்துக்கு ’பெப்சி’ அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள் வைத்திருந்தார். ஆனால், தொலைக்காட்சி நிர்வாகம் செவி சாய்க்கவில்லை!  இதையடுத்து, ’பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் ஷூட்டிங் நடக்கும் இடத்தில் ’பெப்சி’ அமைப்பின் சார்பில் போராட்டம் நடத்துவதென அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த பிரச்னை தற்போது தீர்க்கப்பட்டுள்ளதாக ’பெப்சி’ தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறியுள்ளார். ”சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரான குஷ்புவிடம் ’பிக்பாஸ்’ பிரச்னையை கொண்டு போனோம்! அவர், இந்தப் பிரச்னையில் தலையிட்டு சம்மந்தப்பட்டவர்களிடம் பேசி பிரச்னையை தீர்த்து வைத்துள்ளார். இதையடுத்து,’பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் ’பெப்சி’ தொழிலாளர்களை அதிகம் பயன்படுத்திக் கொள்வதாக தொலைக்காட்சி நிர்வாகம் உறுதியளித்துள்ளது. இதனால்,  ’பெப்சி’ அமைப்பின் சார்பில் நடப்பதாக இருந்த போராட்டம் கைவிடப்பட்டது.” என கூறினார் ஆர்.கேசெல்வமணி.  

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close