சென்ட்ராயன் மேல் கடும் கோபத்தில் ஹவுஸ்மேட்ஸ் - பிக்பாஸ் ப்ரோமோ 2

  திஷா   | Last Modified : 04 Jul, 2018 01:13 pm
bigg-boss-promo-2

பிக்பாஸ் தமிழ் இரண்டாம் சீஸன் இன்னும் சூடு பிடிக்க வில்லையே என காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு இன்றைய நிகழ்ச்சி சற்று ஆறுதல் அளிக்கும் எனத் தெரிகிறது. 

முதல் சீஸனைப் பார்த்து அனைவரும் மிக ஜாக்கிரதையாக செயல்படுகிறார்கள், எல்லோரும் அவர்களின் ஒரிஜினாலிட்டியை மறைத்து விட்டு, பொய்யாக நடிக்கிறார்கள் என்பது, நிகழ்ச்சி தொகுப்பாளர் கமல் முதற்கொண்டு கூறும் குற்றச்சாட்டு. 

எவ்வளவு நாட்களுக்குத் தான் பொய்யாக நடிக்க முடியும், கண்டிப்பாக ஒவ்வொருவரின் நிஜ முகங்கள் வெளியில் வரும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள். 

இப்போது வந்துள்ள இரண்டாவது ப்ரோமோவில் மஹத்-மும்தாஜ் இருவருக்கும் சண்டை வர நடுவில் சென்ட்ராயன் ஏதோ கூறி மாட்டிக்கொள்கிறார். 'இந்த மாதிரி வேல மட்டும் நீ பண்னுணா, நா கடுப்பாகிடுவேன்' என்கிறார் மஹத். 

இதற்கிடையே 'அவங்க உங்கக் கிட்ட பேசல' என ஹை பிட்சில் சென்ட்ராயனை சமாதானம் செய்கிறார் ஜனனி. உண்மையில் என்ன நடந்தது என நிகழ்ச்சியில்தான் தெரியும். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close