சாப்பாட்டுக்காக மும்தாஜிடம் சண்டைப்போடும் ஜனனி - பிக்பாஸ் ப்ரோமோ 3

  திஷா   | Last Modified : 04 Jul, 2018 02:55 pm
bigg-boss-promo-3

என்னவோ தெரியவில்லை, இன்று அடுத்தடுத்து சண்டைப் ப்ரோமோக்களை வெளியிட்டு ரசிகர்களை அதிக எதிர்ப்பார்ப்புக்கு ஆளாகியிருக்கிறார் பிக்பாஸ். இப்போது வெளியாகியிருக்கும் மூன்றாவது ப்ரோமோவும் சண்டையைத்தான் காட்டுகிறது. 

மின்விளக்குகள் அணைக்கப்பட்ட நிலையில், சமையலறையில் பாத்திரம் கழுவிக் கொண்டிருக்கிறார் மும்தாஜ். 'சாப்பிடும் போது அத எடுக்காத, இத எடுக்காதன்னு சொன்னா எரிச்சலோட வேதனையா இருக்கு' என்கிறார் ஜனனி. 'எரிச்சலா இருந்த என் கிட்ட பேசாதீங்க ஜனனி, எனக்கு என்ன சரியா தோணுதோ, அதைத் தான் நான் பண்ணுவேன்' என அதற்கு பதில் தருகிறார் மும்தாஜ். சும்மாவே இரண்டு பெண்கள் சண்டைப் போட்டுக் கொண்டாள், மிக ஆர்வமாகப் பார்க்கும் இந்த சமூகத்தில், இரண்டு நடிகைகள் சண்டைப் போட்டுக் கொள்வதை சொல்லவா வேண்டும். 

ஆரம்பத்தில் இருந்தே ஜனனிக்கு மும்தாஜ் மேல் அவ்வப்போது கோபம் வருவதையும் இந்த இடத்தில் நாம் நினைவில் கொள்ள வேண்டும். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close