மஹத் யாஷிகாவை காறி துப்பும் பாலாஜி - பிக்பாஸ் ப்ரோமோ 1

  திஷா   | Last Modified : 05 Jul, 2018 11:16 am
bigg-boss-promo-1

தீவிரமாக சண்டையில் கவனம் செலுத்தி வருகிறார் பிக்பாஸ். நேற்றைப் போலவே இன்றும் சண்டைப் போட்டுக் கொள்ளும் பிக்பாஸ் ப்ரோமோ தான் வெளி வந்திருக்கிறது. 

ஒருபுறம் இப்படி சண்டைகளை வைத்து TRP-யை ஏற்ற சேனல் தரப்பில் முழு முயற்சி எடுக்கிறார்கள் என்ற விமர்சனம் எழுந்தாலும், அது வேலைக்கு ஆகவில்லை என்பதே உண்மை. பார்வையாளர்களுக்கு எந்த விறுவிறுப்பும் இல்லாமல் மிகவும் டல்லாகப் போய்க் கொண்டிருக்கிறது பிக்பாஸின் இந்த இரண்டாவது சீசன்.  இந்நிலையில் இப்போது வெளிவந்திருக்கும் பிக்பாஸ் ப்ரோமோவில் டேனியலுக்கும் மும்தாஜுக்கும் சண்டை முற்றியுள்ளது.

இனிமேல் உங்களுடைய கப்பை எல்லாம் வாஷ் பண்ண முடியாது என்கிறார் மும்தாஜ், இதனால் முதல் வாரத்தில் பாத்திரம் கழுவும் டீமில் இருந்த ரித்விகாவுக்கும் மும்தாஜுக்கும் வாக்கு வாதம் ஏற்படுகிறது. இதில் டேனியும் சேர்ந்து ஒருவரை ஒருவர் தாக்கி கடுமையாக திட்டிக் கொள்கின்றனர். ஒருபுறம் காரசாரமாக சண்டை நடக்கும் போது மஹத் யாசிகா ஆனந்தை கட்டிப்பிடித்து விளையாடிக் கொண்டிருக்கிறார். 

இதைப் பார்க்கும் பாலாஜி காறி துப்புகிறார். 

(நீங்க மட்டும் இல்ல, வெளில இருந்து பாக்குற எல்லாருமே இதத்தான் பண்றாங்க பாலாஜி)

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close