கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும் பிக்பாஸ் ப்ரோமோ - 2

  திஷா   | Last Modified : 05 Jul, 2018 02:37 pm
bigg-boss-promo-2

பகலில் யார் தூங்கினாலும், பிக்பாஸ் வீட்டில் நாய் குரைப்பது வழக்கம். தற்போது வந்துள்ள ப்ரோமோவில் மஹத் தூங்கிக் கொண்டிருக்கிறார். அப்போது நாய் குரைக்கிறது. வைஷ்ணவி அப்போது மஹத்தின் கட்டிலை நோக்கி செல்கிறார். 

'வர்ற வரைக்கும் நீங்க உக்காருங்க மஹத்ன்னு நீங்க சொல்லிருந்தா அவங்க போயிருக்க மாட்டாங்க' என நித்யா சொல்ல, 'நித்யா நீங்க அநாவசியாமா ஆர்க்யூ பண்றீங்க, இது சரி இல்ல' என்கிறார் வைஷ்ணவி. 'சும்மா நய நயன்னு ஏன் மேல வந்து விழறீங்க' என மஹத், வைஷ்ணவியைக் கேட்பது போல் தெரிகிறது. 

ஒரு கேப்டனாக இருக்கும் போது என ஆரம்பிக்கும் பாலாஜி, பீப் போடும் அளவுக்கு ஏதோ வார்த்தயை உதிர்க்கிறார். 'துப்பில்லாதவங்களுக்கு எதுக்கு கேப்டன்ஷிப்பைக் குடுக்குறீங்க' எனவும் கோபமாகிறார். என்ன நடக்கிறது என இரவு 9 மணிக்குப் பார்ப்போம். 

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close