டேனிக்கும் மும்தாஜுக்கும் இடையில் என்ன தான் நடந்தது - பிக்பாஸ் ப்ரோமோ 3

  திஷா   | Last Modified : 05 Jul, 2018 03:31 pm
bigg-boss-promo-3

டேனியலுக்கும் மும்தாஜுக்கும் வாக்கு வாதம் நடப்பது போல இன்றைய முதல் பிக்பாஸ் ப்ரோமோ வெளியாகியிருந்தது. தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில், வீட்டின் தலைவர் வைஷ்ணவியிடம் சென்று மும்தாஜ் பேசுகிறார். 

 'நீங்க ஒத்துக்குறீங்களா இல்லையான்னு எனக்குத் தெரியாது. டேனி வேலைக்காரி மாதிரி, இத பண்ணிக் குடுங்க, அதப் பண்ணிக்குடுங்கன்னு சொல்றது சரியில்ல' என்கிறார், 'ஒருத்தரோட குணம் அப்படித்தான்னு தெரிஞ்சிடுச்சின்னா, நாம அவங்கள கண்டுக்கக் கூடாது' என  அதற்கு பதிலளிக்கிறார் வைஷ்ணவி. ஆனால் அது தனக்கு சரியாக வராது என்கிறார் மும்தாஜ். 

 சமையலறையில் இருக்கும் டேனியிடம், 'உனக்கும் வேற வேலை தெரியாது, எனக்கும் வேற வேலை தெரியாது, நாம ரெண்டு பேரும் இத நம்பித்தான் இருக்கோம்' என்கிறார் சென்ட்ராயன். அப்படி டேனிக்கும் மும்தாஜுக்கும் இடையில் என்ன நடந்தது என இரவு நிகழ்ச்சியில் பார்ப்போம். 


 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close