’சரக்கு’ அடிக்கும் பிக்பாஸ் 2 வைஷ்ணவி: வைரலாகும் வீடியோ

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 06 Jul, 2018 01:31 pm

biggboss-2-vaishnavi-who-emptied-saraku-in-7-seconds-vairal-video

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் தலைவியாக இருந்து வரும் வைஷ்ணவி 7 விநாடிகளில் பீர் அடிக்கும் டாஸ்க்கை வெற்றிகரமாக முடித்து அதனை தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அது தற்போது வைரல் ஆகி வருகிறது. 

பிக்பாஸ் சீசன் 2ல் பங்கேற்றுள்ள வைஷ்ணவி, தனது காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின. இந்நிலையில் அவர் சரக்கடிக்கும் படங்கள் வெளியாகி வருகின்றன.  மூன்றாவது வாரமாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் வீட்டில் வைஷ்ணவி தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களில் வைஷ்ணவி பற்றிய தேடுதல் கூகுள் மற்றும் சோஷியல் மீடியாக்களில் அதிகமானது.

அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தைப் பார்த்த பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனால், அவர் பெயர் தொடர்ந்து டேமேஜ் ஆகி வருகிறது. பிக்பாஸ் வீட்டில், அவர் பிரச்னைகளை தூண்டி விடும் உள்ளடி வேலைகளில் ஈடுபடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார் என விமர்சனம் எழுந்து வருகிறது.  இந்த வார தலைவியாக ஆகி விட்டதால் என்னவெல்லாம் செய்வாரோ? எப்போது பிரச்சனை வெடிக்குமோ என மற்ற போட்டியாளர்கள் புலம்பி வருகின்றனர்.

A post shared by Vaishnavi Babycats Prasad (@livetimefe) on

ஒவ்வொரு வார இறுதியிலும் சூடு பிடிக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி வைஷ்ணவி தலைவியானதற்கு பின்பு இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும் என  எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது அவர் விநாடிகளில் பாட்டில் கப்பில் நிரப்பப்பட்டிருக்கும் பீரை, ஸ்ட்ரா போட்டு காலியாக்கி வெற்றி கண்ட வீடியோ ஒன்றையும் பதிவிட்டு உள்ளார். அத்துடன் கடற்கரை அருகே உள்ள குடிலில் காலை வேளையில் பீர் கிளாஸுடன் அமர்ந்திருக்கும் படத்தையும் பதிவிட்டு உள்ளார். 

வைஷ்ணவியின் ஹாட் லுக் போட்டோ கேலரி...

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Showing 1 of 30

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.