ஹவுஸ்மேட்ஸை அழ வைக்கும் பிக்பாஸ் - ஜூலை 6 - ப்ரோமோ 1

  திஷா   | Last Modified : 06 Jul, 2018 11:13 am

bigg-boss-promo-1

சிரிப்பு, கொண்டாட்டம், விளையாட்டு, சண்டை, அழுகை, புறம் பேசுதல் என எல்லாம் கலந்த கலவை தான் பிக்பாஸ். முதல் சீஸனில் கொஞ்சம் இயல்பாக இருந்த இந்நிகழ்ச்சியில், தற்போது முழுக்க முழுக்க போட்டியாளர்கள் நடிப்பது போல் இருக்கிறது. 

அதனால் அவர்களுக்குள் இருக்கும் இயல்பை வெளி கொண்டு வரவோ என்னவோ, ஹவுஸ்மேட்ஸ் அனைவரையும் அழ வைக்கிறார் பிக்பாஸ். ஆம் இன்றைய முதல் ப்ரோமோ அப்படித்தான் வெளியாகியிருக்கிறது. நேற்று முழுவதும் சண்டைப் போடும் ப்ரோமோக்களை வெளியிட்ட சேனல் தரப்பு, இன்று அனைவரையும் எமோஷனலாக்கும் முயற்சியில் இருப்பது தெரிகிறது. 

தங்களின் அன்புக்குரியவர்களைப் பற்றி கூற வேண்டும் என பிக்பாஸ் கூறியிருப்பார் போல, போட்டியாளர்கள் அனைவரும் தங்களுக்கு பிடித்தவர்கள் யார் என்று தெரிவிக்கின்றனர்.

அதில் டேனியல் தேம்பி தேம்பி அழ, ரித்விகா, தாடி பாலாஜி, நித்யா என போட்டியாளர்கள் அடுத்தடுத்து அழுகிறார்கள். நிகழ்ச்சி சூடு பிடிக்கவில்லை என்று இப்படி சாமர்த்தியமாக ஹவுஸ்மேட்ஸை அழ வைத்து அதில் குளிர் காய்கிறார் இந்த பிக்பாஸ். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close