கன்ஃப்யூஸான பிக்பாஸ் - ப்ரோமோ 2

  திஷா   | Last Modified : 06 Jul, 2018 03:34 pm
bigg-boss-promo-2

பிக்பாஸ் கொஞ்சம் 'கன்ஃப்யூஸ்' ஆகிட்டார் போல. வழக்கம்போல் காலை முதல் ப்ரோமோவை வெளியிட்ட பிக்பாஸ் அடுத்தடுத்து இரண்டு மற்றும் மூன்றாவது ப்ரோமோவையும் வெளியிட்டார். நாமும் அதைப் பார்த்து விட்டு, உங்களுக்காக டைப்பிக் கொண்டிருக்கையில் திடீரென அந்தப் ப்ரோமோக்கள் காணாமல் போய்விட்டனா. என்னடா இது 'கெணத்த காணாங்குற மாதிரி, ப்ரோமோவ காணோமே' என அலசி ஆராய்கையில், பிக்பாஸே அந்த இரண்டு ப்ரோமோக்களையும் டெலிட் செய்திருப்பது தெரிய வந்திருக்கிறது. ப்ரோமோ 2, ப்ரோமோ 3 என பதிவிட்டிருந்த வீடியோக்களை அழித்துவிட்டு, புதிதாக ப்ரோமோ 2 வை ரிலீஸ் செய்திருக்கிறார் பிக்க்க் பாஸ். 

வழக்கமா ஹவுஸ்மேட்ஸ் தான இந்த மாதிரி குழப்பத்துல இருப்பாங்க, சரி விடுங்க விஷயத்துக்கு வருவோம். அவர் டெலிட் செய்த இரண்டு ப்ரோமோவில் முதலில் சென்ட்ராயனுக்கும் மஹத்துக்கும் சண்டை வருவதும், அடுத்ததில் இருவரும் சமாதானமாக பேசுவதும் என்று வழக்கத்திற்கும் மாறாக 'சப்'பென்று தான் இருந்தது அவை. 

டெலீட் செய்து விட்டு புதிதாக போட்டிருக்கும் 2-வது ப்ரோமோவில், கொஞ்சல் எல்லாம் வேலை செய்ற இடத்தில் வேண்டாம் என்று திட்டுகிறார்கள். ஐஸ்வர்யா அழுகிறார். வேலை செய்வது தொடர்பான ஏதோ பிரச்னை (ப்ரோமோல அப்படித்தான் காமிப்பாங்க, ஆனா ப்ரோகிராம்ல அப்படி இருக்காதுங்கறது வேற விஷயம்) நடந்திருக்கிறது. 'எல்லாரும் கலந்து பேசிட்டு கடைசியா என் கிட்ட வாங்க' என்கிறார் வீட்டின் தலைவி வைஷ்ணவி, 'அப்பத்தான் இன்னும் பெருசா வெடிக்க வைப்பா' என டைமிங் மிஸ்ஸாகாமல் கவுண்டர் கொடுக்கிறார் டேனி. பிக்பாஸ் வீட்டுடன் சேர்த்து ப்ரோமோவைப் பார்க்கும் நமக்கும் சிரிப்பு வெடிக்கிறது. வைஷ்ணவி என்ன செய்யப்போகிறாரோ...

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close